Oscars 2023: தடுக்கி விழுந்த புகைப்படக் கலைஞருக்கு உதவிய நடிகை.. ஆஸ்கர் விழா டாப் 5 சுவாரஸ்யங்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருது விழா இனிதே நிறைவடைந்தது. இந்த முறை அடி தடி இல்லாமல் ஆட்டம் பாட்டத்துடன் ஆஸ்கர் விழா அரங்கேறியது பலரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

எதிர்பாராமல் தடுக்கி விழுந்த புகைப்படக் கலைஞருக்கு ஓடிச் சென்று உதவிய நடிகை முதல் ஆர்ஆர்ஆர் ஆஸ்கர் வென்றதும் மனைவியுடன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட ராம்சரண் என ஏகப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.

தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் இந்த முறை ஆஸ்கர் மேடைக்கு கழுதை அழைத்து வந்ததையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் நடைபெற்ற டாப் 5 சுவாரஸ்ய நிகழ்வுகள் என்ன என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

 எகிறி குதித்த இயக்குநர்

எகிறி குதித்த இயக்குநர்

இந்த முறை ஆஸ்கர் விருது விழாவில் அதிக விருதுகளை அள்ளிய திரைப்படம் என்றால் அது Everything Everywhere All At Once திரைப்படம் தான். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் தனது திரைப்படம் வென்ற மகிழ்ச்சியில் இயக்குநர் டேனியல் க்வான் எகிறி குதித்து ஆட்டம் போட்ட புகைப்படத்தை அகாடமி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

தீபிகா படுகோன் பேச்சு

ஆஸ்கர் மேடையில் முதன் முறையாக ஏறிய இந்திய நடிகை தீபிகா படுகோன் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் பர்ஃபார்மன்ஸ் வருவதற்கு முன்னதாக அது தொடர்பாக பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தீபிகா படுகோன் ஒவ்வொரு வார்த்தை பேச பேசவும் ஹாலிவுட் பிரபலங்கள் உற்சாகமாக கத்திய நிலையில், அவர் அடிக்கடி தனது பேச்சையே நிறுத்தி நிறுத்தி பேசியது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.

கழுதையுடன் ஜிம்மி கிம்மல்

போலாந்து நாட்டுப் படமான Eo என்கிற படத்தில் கழுதை தான் மெயில் லீடாகவே நடித்திருந்த நிலையில், அந்த படம் ஆஸ்கர் நாமினேஷனில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான போட்டியில் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில், அந்த கழுதையுடன் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் ஆஸ்கர் மேடையில் நின்று கொண்டு பேசிய பேச்சு பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

தடுக்கி விழுந்த போட்டோகிராஃபர்

ஆஸ்கர் விழாவில் பிரபலங்கள் ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொண்ட நிலையில், போட்டோக்களை எடுத்து வந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் திடீரென எதிர்பாராமல் தடுக்கி விழுந்த நிலையில், அதை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகை லேடி காகா உடனடியாக ஓடி வந்து, உங்களுக்கு எதுவும் ஆனதா? என அக்கறையுடன் விசாரித்தார். அந்த புகைப்படக் கலைஞர் எதுவும் ஆகவில்லை என நடிகைக்கு நன்றி கூறிய காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

 ராம்சரண் ஹேப்பி

ராம்சரண் ஹேப்பி

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் நாமினேஷன் அடைந்த நிலையில், அந்த பாடல் வக்காண்ட ஃபாரெவர், டாப்கன் பாடல்களை எல்லாம் வீழ்த்தி வெற்றி பெறுமா இல்லையா? என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், ஆஸ்கர் கோஸ் டு ஆர்ஆர்ஆர் 'நாட்டு நாட்டு' என்கிற அறிவிப்பை கேட்டவுடனே நடிகர் ராம்சரண் தனது மனைவி மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுடன் உற்சாகமாக கரவொலி எழுப்பிய காட்சிகளும் இந்த வருட ஆஸ்கரின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கட்டித் தழுவிக் கொண்டு பேசியதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X