'ஐ ஆம் வெயிட்டிங்'... ரசிகர்களைக் கவர்ந்த டாப் 5 இடைவேளைக் காட்சிகள்

By Manjula

சென்னை: படங்களைப் பொறுத்தவரையில் இடைவேளை 'ட்விஸ்ட்டுடன்' இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

மேலும் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு படத்தின் இடைவேளை தான் அப்படத்தைத் தொடர்ந்து பார்க்கலாமா? இல்லையா? என்பதைத் தீர்மானம் செய்கிறது.

அந்தவகையில் மிக சுவாரஸ்யமான இடைவேளைக் காட்சிகள் கொண்ட 5 படங்களை இங்கே பார்க்கலாம்.

துப்பாக்கி

துப்பாக்கி

விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் 2012 ம் ஆண்டு வெளியான படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் விஜய்க்கு முதல் 100 கோடிப் படமாக அமைந்தது. இப்படத்தின் இடைவேளைக் காட்சியானது விஜய் 'ஐ ஆம் வெயிட்டிங்' என்று வில்லனிடம் கூறுவது போல அமைந்திருக்கும். இன்றுவரை ரசிகர்களின் மனங்கவர்ந்த இடைவேளைக் காட்சியாக இப்படம் உள்ளது.

மங்காத்தா

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ம் ஆண்டு வெளியான படம் 'மங்காத்தா'. இப்படத்தில் தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோயிசங்களையும் உடைத்து அஜீத் நடித்திருந்தார். 50 வது படமென்றாலும் 4 இளம் நடிகர்களுடன் இணைந்து அஜீத் நடித்தது தமிழ்த் திரையுலகில் ஆச்சரியங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக இப்படத்தின் இடைவேளையில் அஜீத் சிரிக்கும் காட்சி ரசிகர்களை இப்படத்துடன் ஒன்றிப் போக வைத்தது.

மாயா

மாயா

சமீபகாலமாக வெளியான பேய்ப்படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த படமாக 'மாயா' திகழ்கிறது. அழகுப்பதுமையான நயன்தாரா அறிமுக இயக்குநரின் படத்தில் நடித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இடைவேளைக்குப் பின்தான் கதை ஆரம்பம் என்றாலும், முதல் பாதியில் வரிசையாக நிகழும் கொலைகள் இடைவேளைக்குப்பின் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

தனி ஒருவன்

தனி ஒருவன்

கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களில் தனி ஒருவனுக்கு தனியான இடமுண்டு. ஹீரோ ஜெயம் ரவிக்கு சமமாக அரவிந்த் சாமி வில்லத்தனம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். குறிப்பாக வில்லனின் கை ஓங்குவது போல இப்படத்தின் இடைவேளை அமைய ரசிகர்கள் 2 வது பாதியை ஆவலுடன் காத்திருந்தனர்.

தெறி

தெறி

இந்த வரிசையில் கடந்த வாரம் வெளியான 'தெறி' படத்தின் இடைவேளைக் காட்சியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் இடைவேளையில் நைனிகாவைத் தூக்கிக்கொண்டு விஜய் வாயில் விரல் வைத்து 'உஷ்' என்பார். 'துப்பாக்கி' படத்திற்குப் பின் 'தெறி' இடைவேளை தங்களைக் கவர்ந்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X