twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர் ரிலீசிற்காக காத்திருக்கும் கோலிவுட்டின் டாப் 5 படங்கள்

    |

    சென்னை : கொரோனா பரவல், லாக்டவுன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பல படங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. பல படங்கள் முடிக்கப்பட்டாலும், தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி உள்ளன. அடுத்தடுத்த கொரோனா அலையால் படப்பிடிப்புக்களை அடிக்கடி நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அடுத்தடுத்த கொரோனா அலை பரவல், லாக்டவுனால் தியேட்டர்கள் மீண்டும் எப்போதும் திறக்கப்படும் என்பது தெரியவில்லை. அப்படியே திறக்கப்பட்டாலும் மக்கள் இனி தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது சந்தேகம் தான். இதனால் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், நயன்தாரா நடித்த நெற்றிக்கண் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

    தலைவர் படம்னாலே ஜோரு ஜோருதான்... 8 மில்லியனை தாண்டிய டைட்டில் மோஷன் போஸ்டர் தலைவர் படம்னாலே ஜோரு ஜோருதான்... 8 மில்லியனை தாண்டிய டைட்டில் மோஷன் போஸ்டர்

    இருந்தாலும் மாஸ்டர் படத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கையால், தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ளனர். அப்படி தியேட்டர் திறப்பிற்காக காத்திருக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும், முக்கிய படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    அண்ணாத்த

    அண்ணாத்த

    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. கிராமத்து கதையான இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தீபாளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்குள் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையாலும், ரஜினி படம் என்பதால் மக்கள் நிச்சயம் தியேட்டருக்கு வந்து படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் படக்குழு இருந்து வருகிறது.

    மாநாடு

    மாநாடு

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் மாநாடு. இந்த படம் மே மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா பரவலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வது உறுதியாக உள்ளதால் தற்போது ஆயுத பூஜை ஸ்பெஷலாக அக்டோபர் மாதத்தில் மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    சியான் 60

    சியான் 60

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் தனது மகனுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் சியான் 60. ஏற்கனவே 50 சதவீதம் படப்பிடிப்புக்கள் முடிக்கப்பட்ட நிலையில், லாக்டவுனால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பை ஜுலை மாதத்தில் மீண்டும் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தையும் அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டாக்டர்

    டாக்டர்

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய ஆரம்பத்தில் முடிவு செய்தனர். பிறகு கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியிடலாம் என மே மாதத்திற்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். அதற்குள் கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டதால், தியேட்டர்கள் திறந்த பிறகு ரிலீஸ் தேதியை முடிவு செய்யலாம் என காத்திருக்கின்றனர்.

    தலைவி

    தலைவி

    டைரக்டர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி நடித்துள்ள படம் தலைவி. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான இந்த படம் மார்ச் மாதமே ரிலீஸ் செய்யப்பட வேண்டியது. ஆனால் தமிழக சட்டசபை தேர்தல், கொரோனா பரவல் போன்ற பல காரணங்களில் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. தியேட்டர் திறந்த பிறகு தான் படத்தை ரிலீஸ் செய்வது என படக்குழு உறுதியாக உள்ளது.

    வரிசையில் காத்திருக்கும் படங்கள்

    வரிசையில் காத்திருக்கும் படங்கள்

    இது தவிர விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் போன்ற படங்களும் தியேட்டர் திறப்பிற்காக காத்திருக்கின்றன. தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படங்கள் பல மாதங்களாக ரிலீசிற்காக காத்திருக்கின்றன. ஆனால் தியேட்டர் திறப்பதற்குள் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் படங்களும் ரிலீசிற்கு வந்து விடும். கமலின் இந்தியன் 2, பாபநாசம் 2, விக்ரம் நடிக்கும் கோப்ரா, சூர்யாவின் சூர்யா 40, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சிவகார்த்திகேயனின் டான், அருண் விஜய்யின் பார்டர் உள்ளிட்ட படங்களும் அடுத்தடுத்து ரிலீசிற்காக காத்திருப்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    English summary
    In kollywood, top actors movies which are waiting for theatrical release
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X