டாப் 5 சினிமா செய்திகள் - பிரேம்ஜி அமரனுக்கு குழந்தை முதல் மீனாட்சி சௌதரியின் சூப்பர் க்ளிக்ஸ்வரை

சென்னை: கோலிவுட்டில் தினமும் ஏதோ ஒன்று நடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்தவகையில் இன்று பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதேபோல் கொரியன் உணவுகள் பற்றி வைரமுத்து எழுதிய கவிதை, கோட் பட நடிகை மீனாட்சி சௌதரி பகிர்ந்த சூப்பர் க்ளிக்ஸ் என டாப் 5 கோலிவுட் செய்திகளை இதில் பார்க்கலாம்.

கங்கை அமரனின் மூத்த மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அமரன் கடந்த வருடம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு குடும்பம், தொழில் என மொத்தமாக மாறியிருக்கிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அவரது மனைவி இந்து இன்று பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். எனவே அந்தத் தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

வைரமுத்து எழுதிய கவிதை: சினிமாவில் முன்னர் போல் பெரிய அளவில் பாடல்கள் எழுதுவதில்லை வைரமுத்து. அதேசமயம் இலக்கிய விழாக்களில் கலந்துகொள்வது, சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி கருத்து சொல்வது என தன்னை பிஸியாக வைத்திருக்கும் அவர்; கொரியன் உணவுகள் பற்றி கவிதை நடையில் தனது எக்ஸ் பக்கத்தில் போட்டிருந்த ட்வீட் ரசிகர்களிடையே பெருவாரியான கவனத்தை ஈர்த்தது.

Top 5 Kollywood News Premgi Amaren Welcomes Baby Girl Vairamuthu s Korean Food Poem Goes Viral amp amp More
Photo Credit:

தள்ளிப்போன ரிலீஸ்: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம்தான் வா வாத்யாரே. கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வெளியான போஸ்டரில் டிசம்பரில் ரிலீஸ் என்று மட்டும் போட்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போகுமோ என்ற கவலை கார்த்தியின் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

டீசல் பட ஓடிடி தேதி: சண்முகம் முத்துசாமியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் படத்தின் கதைக்கருவுக்கும், இயக்குநரின் உழைப்புக்கும் பாராட்டு குவிந்தது. இந்நிலையில் ஆஹா ஓடிடி தளத்தில் நவம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மீனாட்சியின் க்ளிக்ஸ்: தெலுங்கில் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வரும் மீனாட்சி சௌதரி தமிழில் சிங்கப்பூர் சலூன், கோட் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சாய் அபயங்கருடன் ஒரு ஆல்பம் பாடலிலும் தோன்றியிருந்தார். அதற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தி பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X