டாப் 5 சினிமா செய்திகள்..கோலிவுட் ஸ்டார்கள் Ai ஃபோட்டோஸ் முதல் டியூட் இயக்குநரின் மோசமான ரிப்ளை வரை

சென்னை: கோலிவுட் ஸ்டார்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டோரை வைத்து ரசிகர் ஒருவர் உருவாக்கிய AI ஃபோட்டோக்கள் இணையத்தை கலக்கின. அதேபோல் ரசிகை ஒருவர் வைத்த விமர்சனத்துக்கு டியூட் இயக்குநர் கீர்த்திஸ்வரன் மோசமாக ரிப்ளை செய்ததும் பேசுபொருளாகியிருக்கிறது. இப்படி இன்று நடந்த டாப் 5 சினிமா செய்திகளை இதில் பார்க்கலாம்.

இணையத்தை கலக்கிய புகைப்படங்கள்: கோலிவுட்டில் இருக்கும் அத்தனை டாப் ஸ்டார்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் எல்லோருமே விரும்புவார்கள். ஆனால் அப்படி நடப்பது அபூர்வமாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் எல்லாம் ஒன்றாக டீ குடிக்க செல்லும்படியும், பீச்சுக்கு போகும்படியும் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஏஐ ஃபோட்டோக்கள் இணையத்தை கலக்கின.

டியூட் இயக்குநரின் மோசமான ரிப்ளை: டியூட் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான கீர்த்திஸ்வரன் முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பெற்றுவிட்டார். அதேசமயம் படத்தில் மமிதா பைஜு முட்டிப்போட்டிருக்கும் சீனில் அவர் எழுதிய வசனம் கண்டனத்தை சம்பாதித்தது. அந்த வசனம் மட்டுமில்லை நீங்கள் கொடுத்த பேட்டியில் அதை நார்மலைஸ் செய்ததும் தவறு என்பதை சுட்டிக்காட்டிய ரசிகைக்கு, 'எனக்கு மெசேஜ் செய்வதற்கு பதிலாக உனக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்' என்று அவர் ரிப்ளை செய்தது விமர்சனத்தை சந்தித்திருக்கிறது.

Top 5 Kollywood news today AI photos of Rajini Kamal Vijay go viral Dude director s rude reply
Photo Credit:

திருமணமான திவாகர்: வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் திவாகர் தனக்கு திருமணமாகவில்லை என்று இத்தனை நாட்கள் சொல்லிவந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பே அவருக்கு திருமணமாகியிருக்கிறது. அதுகுறித்த புகைப்படமும் இன்று ட்ரெண்டானது.

நேரில் சந்தித்துக்கொண்ட கமல் - குஷ்பூ: தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறிய நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனும், சுந்தரின் மனைவி குஷ்பூவும் இன்று நேரில் சந்தித்துக்கொண்டார்கள்.கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு திரும்பியபோது இந்த சந்திப்பு நடந்தது.

கங்கையில் கரைந்த ரோபோ சங்கர்: சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார் ரோபோ சங்கர். அவரது இழப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவருகிறது அவரது குடும்பம். இந்நிலையில் அவரது மகள் இந்திரஜா, மனைவி பிரியங்கா, மருமகன் கார்த்திக் ஆகியோர் சங்கரின் அஸ்தியை வாரணாசியில் இருக்கும் கங்கை நதியில் கலந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X