Don't Miss!
- News
மாட்டிறைச்சி.. மின்கம்பத்தில் கட்டிவைத்து அசாம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. பரபர கர்நாடகா.. ஷாக்
- Sports
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. 22வது முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்.. நடால் சாதனை சமன்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
2023ல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் டாப் 5 படங்கள்.. இந்த லிஸ்ட்டில் உங்க ஃபேவரைட் இருக்கா?
சென்னை: 2022ம் ஆண்டு சினிமா துறைக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஆண்டாக மாறியுள்ளது. 2020ல் ஆரம்பித்த கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சினிமா துறை ஏகப்பட்ட லாக்டவுன்கள் 50 சதவீதம் இருக்கை என ரொம்பவே அவதிப்பட்டது.
2022ம் ஆண்டின் டாப் 10 படங்கள், நடிகர்கள், நடிகைகள் என பலவற்றை அலசி ஆராய்ந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் டாப் 5 படங்கள் என்ன என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்..
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாக உள்ளன.
பிக்
பாஸ்
சீசன்
6:
ஷிவின்
தான்
சூப்பர்
ஸ்டார்...
விக்ரமனை
கட்டிப்
பிடித்து
அழுத
மணிகண்டன்

5. ஜெயிலர்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் இந்த படம் ரஜினிகாந்த் மற்றும் நெல்சனுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. துணிவு
வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கும் படமாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள துணிவு படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. துணிவு படத்தில் நடிகர் அஜித் வில்லத்தனத்தில் மிரட்டும் காட்சிகள் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

3. வாரிசு
தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், விஜய்யின் வாரிசு படமாவது விஜய்க்கு கைகொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

2. பொன்னியின் செல்வன் 2
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடி வசூலை ஈட்டிய நிலையில், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பொன்னியின் செல்வன் 2 படமும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. இந்தியன் 2
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டு திட்டமிட்டப்படி வெளியானால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் 1000 கோடி வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67, சூர்யா 42
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் சூர்யா 42 படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியானால் மிகப்பெரிய தாக்கம் தமிழ் சினிமாவில் அமையும் என்பது கன்ஃபார்ம்.