ட்விட்டரில் சாதனை படைத்த டாப் 5 திரைப்படங்கள்... பாலிவுட் படங்களை ஓரம் கட்டிய ஜெய்பீம்!
சென்னை : ட்விட்டர் தளத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேகுகளை ட்விட்டர் நிர்வாகம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக ஹேஷ்டேகுகள் பயன்படுத்தப்பட்ட திரைப்படமாக மாஸ்டர் படத்தை ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் தளபதியின் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.


மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இப்படத்தில் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் ட்விட்டர் ஹேஷ்டேக்கில் முதலிடம் பிடித்துள்ளது.

வலிமை
அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அத்தனை முறை ஹாஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்தாலும், வலிமை திரைப்படத்தின் ஹேஷ்டேக் 2வது இடத்தை பிடித்துள்ளது.

பீஸ்ட்
தளபதி விஜய்யின் நடிப்பில் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் 3வது இடத்தை பிடித்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம் என்பதால் இத்திரைப்படத்தை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

ஜெய்பீம்
பெரும் பாராட்டையும்,பெரும் சர்ச்சையையும் கிளப்பிய ஜெய்பீம் திரைப்படம் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் 4வது இடத்தை பிடித்துள்ளது. உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியானத் இத்திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. இப்படத்தில், லியோமோல் ஜோஸ், மணிகண்டன், சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
Recommended Video

வக்கீல் சாப்
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படம் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் அஜித் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் ரீமேக் தான் வக்கீல் சாப் இத்திரைப்படத்தில் பவன் கல்யாண் வழக்கறிஞராக நடித்திருப்பார்.


Click it and Unblock the Notifications











