6 மாசம் போயே போச்சு.. பெரிய ஸ்டார்களை எல்லாம் விடுங்க.. மக்கள் மனதை வென்ற டாப் 5 படங்கள் எது?

சென்னை: சினிமா உலகம் என்றைக்கு பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் கவனம் செலுத்த தொடங்கியதோ அன்று முதல் சினிமா உலகம் பல சவால்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது. பல நூறு கோடிகள் போட்டு எடுக்கப்படும் படங்கள் இரண்டாவது நாளுக்கே திரையரங்கில் ரசிகர்கள் இல்லாமல் காட்சிகள் கேன்சல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களில் வெளியாகி விமர்சன ரீதியான வெற்றி மற்றும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்ற படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

Top 5 Movies In Tamil Cinema Which Was Released First Six Months Of 2025 Original
Photo Credit:

5. மத கஜ ராஜா: இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் கடைசி நேரத்தில் களமிறங்கிய படம் தான் மத கஜ ராஜா. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய படம். சில காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. விஷால் - சந்தானம் கூட்டணியில் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மத கஜ ராஜா ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

Top 5 Movies In Tamil Cinema Which Was Released First Six Months Of 2025 Original
Photo Credit:

4. குடும்பஸ்தன்: பொங்கல் ரேஸ் முடிந்த பின்னர், ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன். நக்கலைட்ஸ் யூட்யூப் சேனலைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளீஸ்வர் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. பணம் இருந்தால் தான் குடும்பத்திலேயே மதிப்பார்கள் என்ற யதார்த்தத்தை பொட்டில் அறைந்ததைப் போல சொன்ன குடும்பஸ்தனை ரசிகர்கள் கைவிடாதது மகிழ்ச்சி.

Top 5 Movies In Tamil Cinema Which Was Released First Six Months Of 2025 Original
Photo Credit:

3. மாமன்: விடுதலை படத்தின் இரண்டு பாகங்கள், கருடன் வெற்றிகளுக்குப் பின்னர் மாமனாக களமிறங்கி வெற்றியைப் பெற்றார் சூரி. படத்தின் மீது சிலருக்கு விமர்சனங்கள் இருந்தாலும், குடும்ப ரசிகர்கள் மத்தியில் படத்தின் சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக ஒர்க்-அவுட் ஆனது. படத்திற்கு இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. படத்தின் கதையை சூரியே எழுதினார். படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியிருந்தார்.

Top 5 Movies In Tamil Cinema Which Was Released First Six Months Of 2025 Original
Photo Credit:

2. டிராகன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான டிராகன். இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் குடும்ப ரசிகர்களுக்கு என தனித்தனி படங்கள் வெளியாகி வந்த நிலையில், டிராகன் இருதரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் படமாக அமைந்தது. வணிக ரீதியாகவும் டிராகன் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

Top 5 Movies In Tamil Cinema Which Was Released First Six Months Of 2025 Original
Photo Credit:

1. டூரிஸ்ட் ஃபேமிலி: 80களின் இறுதியில் இருந்து 90கள், 2000களில் குறிப்பிட்ட பேனரில் படம் வெளியாகிறது என்றாலே, அது பெரும்பாலும் வெற்றிப்படம் தான் என்ற மனநிலை திரைத்துறையினர் மத்தியில் இருந்தது. அந்த வகையில், இந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் அப்படியான எண்ண ஓட்டத்தை உருவாக்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் மில்லியன் டாலர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த மே மாதத்தில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படம் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியானது. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் பெற்ற வெற்றி, திரைத்துறைக்கே நம்பிக்கை விதைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X