தமிழ் சினிமா 2014.... டாப் 5 அறிமுக நாயகிகள்

By Shankar

கோலிவுட்டில் இந்த ஆண்டும் நிறைய புதுமுக நடிகைகள் அறிமுகமானார்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் வந்தார்கள் போனார்கள் என்ற நிலையில்தான் உள்ளனர்.

இவர்களில் நல்ல எதிர்காலம் உள்ள நடிகைகள் 5 பேரை இங்கே பட்டியலிடுகிறோம்.

கேதரின் தெரசா

கேதரின் தெரசா

மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமானவர் கேதரின் தெரசா. தமிழில் இது முதல் படம் என்றாலும், தெலுங்கில் இவர் முன்னணி நடிகை. கேரளாவைச் சேர்ந்தவர். மெட்ராஸ் படத்தில் ஒரு வட சென்னைவாசியாகவே மாறியிருந்தார். இயல்பான நடிப்பு இவரது ப்ளஸ்.

மோனல் கஜ்ஜார்

மோனல் கஜ்ஜார்

சிகரம் தொடு படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் மோனல் கஜ்ஜார். அந்தப் படம் வெளியான அன்றே இவர் நடித்த வானவராயன் வல்லவராயனும் வெளியாகி நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

சிருஷ்டி டாங்கே

சிருஷ்டி டாங்கே

மேகா பட நாயகி இந்த சிருஷ்டி டாங்கே. ஏற்கெனவே யுத்தம் செய் படத்தில் நடித்தாலும், நாயகியாக அவர் அறிமுகமானது மேகா படத்தில்தான். இப்போது கைவசம் 5 படங்களில் நடித்து வருகிறார்.

அகிலா கிஷோர்

அகிலா கிஷோர்

பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமானவர் அகிலா கிஷோர். நடிப்பு, கவர்ச்சி என அனைத்திலும் ஸ்கோர் பண்ணியிருந்தார் அந்தப் படத்தில்.

ஆனந்தி

ஆனந்தி

பொறியாளன் படத்தில் அறிமுகமான ஆனந்தி, கயல் படத்தில் நல்ல பெயரைப் பெற்றார். கைவசம் புதிய படங்களும் இருப்பதால் இந்த ஆண்டு முன்னணி நடிகையாக வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X