கொரோனா காலத்துலயும் சிறப்பான ஓபனிங்... முதல் 5 இடங்களை பிடித்த படங்கள்!

சென்னை : கொரோனா காலத்தில் திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி மற்றும் திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை திரையரங்குகள் சந்தித்தன. இந்த சூழலிலும் தமிழகத்தில் வெளியான படங்கள் சிறப்பான வசூலை பெற்றுள்ளன.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். ஏராளமானோர், தங்களது உயிரை இழந்துள்ள நிலையில், தங்களது விருப்பத்திற்குரியவர்களை மட்டுமின்றி வாழ்வாதாரங்களை இழந்தும் மக்கள் வாடினர்.

கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு

கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு

தற்போது நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் முந்தைய காலகட்டங்களின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில் அதை எதிர்கொள்ளும்வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அரசு முதலில் கைவைத்தது கேளிக்கைகளில்தான்.

குறைந்த ரசிகர்கள்

குறைந்த ரசிகர்கள்

திரையரங்குகள் 100 சதவிகிதம் மூடப்பட்ட நிலையும் இருந்தது. 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சூழலும் காணப்பட்டது. இத்தகைய காரணங்களால் திரையரங்குகளில் சென்று படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. மக்கள் தற்போது ஏராளமான எண்ணிக்கைகளில் ஓடிடியில் படங்களை பார்த்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் சிறப்பான ஓபனிங்

கொரோனா காலத்தில் சிறப்பான ஓபனிங்

கொரோனா பாதிப்பு, ஊரடங்கு, திரையரங்குகள் மூடல், 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி என்று பல்வேறு சூழல்களிலும் திரையரங்குகளில் சென்று படங்களை பார்த்தனர் ரசிகர்கள். அந்தவகையில் கொரோனா சூழலில் திரையரங்குகளில் சிறப்பான ஓபனிங்கை பெற்ற படங்களில் முதல் 5 இடங்களில் உள்ள படங்களை பார்க்கலாம்.

முதலிடத்தில் வலிமை

முதலிடத்தில் வலிமை

அஜித்தின் வலிமை படம் அந்த வகையில் சிறப்பான வசூலை எட்டியுள்ள முதல் படமாக உள்ளது. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் விஜய்யின் மாஸ்டர் படம் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் ரஜினியின் அண்ணாத்த படமும், நான்காவது இடத்தில் தனுஷின் கர்ணன் படமும் இடம்பெற்றுள்ளது.

5வது இடத்தில் ஆர்ஆர்ஆர்

5வது இடத்தில் ஆர்ஆர்ஆர்

தற்போது வெளியாகியுள்ள ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் இந்த வரிசையில் 5வது இடத்தை பெற்றுள்ளது. மற்ற நான்கு படங்களும் நேரடி தமிழ் படங்களாக உள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் படம் டப்பிங் படமாக இருந்தாலும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து ராஜமௌலியின் மேஜிக்கில் இந்தப் படத்தில் ஜொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X