twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரத விலாஸ் முதல் பாரதி வரை.. தேசப்பற்றை உணர்த்திய எவர் க்ரீன் டாப் 5 பாடல்கள்!

    |

    சென்னை: வரும் 15ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தேசப்பற்றை தூண்டும் பாடல்கள் குறித்து ஓர் பார்வை.

    கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுக்க சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் தனிமனித இடைவெளியை பின்பற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

    நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னணியில் கவிஞர்களின் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. பல படங்களிலும் இது பிரதிபலிக்கப்பட்டது. அந்த வகையில் திரைப்படங்களில் தேசப்பற்றையும் தேசத்தின் ஒற்றுமையையும் பறைசாற்றிய பாடல்கள் குறித்து காணலாம்.

    தாங்க முடியாத அந்த வலியை விவரிக்க முடியாது.. தற்கொலை செய்துகொண்ட டிவி நடிகர் உருக்கமான போஸ்ட்! தாங்க முடியாத அந்த வலியை விவரிக்க முடியாது.. தற்கொலை செய்துகொண்ட டிவி நடிகர் உருக்கமான போஸ்ட்!

    இந்திய நாடு என் வீடு

    இந்திய நாடு என் வீடு

    பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற இந்திய நாடு என் வீடு என்ற பாடல் நாட்டின் ஒற்றுமையை பேசும் பாடலாக அமைந்தது. இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், கேஆர் விஜயா, மனோரமா, விகே ராமசாமி, மேஜர் சுந்தர் ராஜன், தேவிகா, எம்ஆர் வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி.சுஷீலா, எம் எஸ் விஸ்வநாதன், மலேசியா வாசுதேவன், எல்ஆர் ஈஸ்வரி, டிஎம் சவுந்தரராஜன் மற்றும் ஏஎல் ராகவன், கே வீரமணி ஆகியோர் இப்பாடலை பாடினர். இப்படத்திற்கு எம்எஸ்வி இசையமைத்திருந்தார்.

    தாயின் மணிக்கொடி

    தாயின் மணிக்கொடி

    ஜெய் ஹிந்த் படத்தில் இடம்பெற்ற தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய் ஹிந்த் என்ற பாடலும் தேசப்பற்றை உணர்த்தும் பாடலாக அமைந்தது. இந்த பாடலில் இடம் பெற்ற ஒவ்வொரு வரியும் தேச உணர்வை தூண்டும் வகையில் எழுதப்பட்டிருந்தது. வித்தியாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    கப்பலேறிப் போயாச்சு

    கப்பலேறிப் போயாச்சு

    கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் இடம் பெற்ற கப்பலேறி போயாச்சு பாடலுக்கும் தேசப்பற்று மிக்க பாடல்களின் பட்டியலில் இடமுண்டு. வாலியின் வரிகளில் இடம் பெற்ற இப்பாடலை பி. சுஷிலா மற்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடியிருந்தனர். இந்தப் பாடலில் கமல் ஹாசன் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

    தமிழா தமிழா பாடல்

    தமிழா தமிழா பாடல்

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் தேசப்பற்றை உணர்த்திய ஒரு வெற்றி படமாக அமைந்தது. இதில் இடம்பெற்ற தமிழா தமிழா பாடலும் தேசப்பற்று மிக்க பாடலாக பார்க்கப்படுகிறது. இதில் பாரதியாரின் கவிதைகளே பாடல் வரிகளாக பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் பாடலை ஹரிஹரன் பாடியிருந்தார்.

    பாரத சமுதாயம்

    பாரத சமுதாயம்

    பாரதி படத்தில் இடம்பெற்ற பாரத சமுதாயம் வாழ்கவே, வந்தே மாதரம் ஆகிய பாடல்களும் தேசப்பற்றை உணர்த்தும் பாடல்களாக அமைந்தது. 2000ஆம் ஆண்டில் வெளி வந்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். சாயாஜி ஷிண்டே, தேவயானி, நிழல்கள் ரவி, பாலாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    English summary
    Top 5 Patriotic songs in Tamil cinema. From Bharatha vilas movie to Bharathi movie has patriotic songs in the films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X