ஹாரிஸ், யுவன் இல்லாத காதல் பாட்டா.. பெண்களுக்கு பிடித்த சூப்பரான ஃபீல் குட் மூவி

சென்னை: ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அந்த படத்தின் போஸ்டர் அல்லது டீசர் உங்களை ஈர்க்க தூண்ட வேண்டும். அதையும் தாண்டி அந்த படத்தில் நல்ல கதை, பிடித்த ஹீரோ, ஹீரோயின் இசையமைப்பாளர் உள்ள படமாக இருந்தால் மட்டுமே அது நல்ல படமா என்ற கேள்வியும் எழலாம். ஆனால், ஒரு சில படங்கள் மட்டுமே ஹீரோ, இயக்குநர் யார் என்று தெரியாமல் ரசிகர்களை கவர்ந்த படமாக இருந்த அனுபவமும் சிலருக்கு இருந்திருக்கும். இப்போ நாம் பார்க்க போவது 2ஆம் ரகம் தான். இதுமாதிரியான படங்களின் வரவு குறைந்துவிட்டதோ என்ற ஃபீல் என்றாவது வந்தால் இந்த படங்களை மிஸ் பண்ணாம மீண்டும் ஒருமுறை பார்த்து ரசித்து விடுங்கள்.

உன்னாலே உன்னாலே: படம் தொடங்குவதற்கு முன்பு வரும் அமைதியை விட சிறந்த உள்ளுணர்வு ஒஹ்... ஒவ்... ஒ ஒ ஒ ஒ... ஒவ் இந்த சோரஸ் தான் மனதை மெல்லிசையாக்கும். சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள்.வர வர கசக்குது கசக்குது என் இளமையும் இந்த பாட்டை கேட்டு கரைந்து போகாதவர்களே கிடையாது. ஹாரிஸ் இசையும், இயக்குநர் ஜீவாவின் மேஜிக் நிறைந்த காதல் காட்சிகளை பார்க்க பார்க்க ஆசையை தூண்ட செய்துவிடும். ஒரு பெண்ணின் பொசசிவை மிக அழகாக காட்டியிருப்பார் ஜீவா.

top 5 movie tamil love movie unnale unnale sachin

அறிமுக நாயகனாக வந்த வினயின் நடிப்பு காதல், துள்ளலான இளைஞன், பெண்களை கண்டால் வழியும் காட்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம். காதலன் காதலிக்கு இருக்கும் பிரச்னைகளை பற்றி பேசிய படங்களில் மிக முக்கியமான படம். க்ளைமாக்ஸில் நடிகை சதா தன் காதலன் மீது வைத்திருப்பது நம்பிக்கையா பொசசிவா என்று உணரும் தருணத்தில் காதலனை விட்டுகொடுப்பது மிகவும் கொடியது. எதிர்பார்க்க முடியாத திருப்பம் தான் உன்னாலே உன்னாலே. நேரம் கிடைத்தால் மிஸ் பண்ண வேண்டாம்.

சச்சின்: காதல், டான்ஸ், ஆக்சன் என கமர்ஷியல் படங்களில் அதிரடி காட்டி வந்த விஜய், திடீரென சடன் பிரேக் அடித்து ரசிகர்களை காதல் மழையில் நனைய வைத்த படம் சச்சின். அவருக்கும் இது ஒரு கமர்ஷியல் பிரேக்கான படம் தான். நல்ல மொமெண்ட்டுக்காக யாரும் காத்திருக்க போவதில்லை அதை கிடைக்கும் போதே அனுபவிக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு சச்சின் ஒரு ஃபீல் குட் காதல் கதைதான். நடுங்கும் ஊட்டி குளிரில் காதல், காமெடி ரொமான்ஸ் பரவசப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஜான் மகேந்திரன். கண் மூடி திறக்கும் போது பாடல்கள் பலரது இரவுகளை கொள்ளையடித்த பாடலாக இருந்திருக்கும்.

top 5 movie tamil love movie unnale unnale sachin

அறிந்தும் அறியாமலும்: என்னப்பா ஒரே காதல் டிராமாவா போட்டு அறுத்துக்கிட்டு இருக்கீங்க என்ற யோசனைகளை கடந்து கலகலப்பான காமெடி சென்டிமென்டான படம் அறிந்தும் அறியாமலும். யுவன் இசையில் கலக்கியிருப்பார். கேங்ஸ்டர் அப்பாவுக்கு உண்மையான மகன் யார் என்று தெரிந்ததும் திடீரென வரும் பாசம், வில்லன் போல் தெரியும் தந்தையை நெருங்க முடியாத மகனின் அன்பையும் எதார்த்தமாக பதிவு செய்த படம். விஷ்ணுவர்தன் இயக்கிய படங்களில் அழகியல் என்றே கூறலாம். தீப்பிடிக் தீப்பிடிக்க பாடல் பார்த்தாலே சற்று பத்திக்கும் தான்.

top 5 movie tamil love movie unnale unnale sachin

7ஜி ரெயின்போ காலனி: செல்வராகவன் இயக்கிய படங்கள் குறைவு தான், ஆனால், பலரது இதயங்களின் கதவுகளை திறக்க வைத்தவர் செல்வா. வீட்டுக்கு உறுப்படாத பையனை காதலிக்கும் பொறுப்புள்ள பொண்ணு அனிதா. செல்வராகவன் இயக்கிய கவிதை என்றே கூறலாம். விடலை வயதில் தோன்றும் காதலும் பிரிவின் வலியும் நினைவுக்கு வரும் அளவுக்கு தலைமுறைகள் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் படம்.யுவன் ஷங்கர் ராஜாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது 7ஜி ரெயின்போ காலனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X