மலேசியா பாக்ஸ் ஆபிஸில் தென்னிந்திய படங்கள்.. ஆர்.ஆர்.ஆர்.ஐ பின்னுக்கு தள்ளிய பீஸ்ட்!
மலேசியா : மலேசியா பாக்ஸ் ஆபிஸில் முதல் 5 இடங்களை தென்னிந்திய திரைப்படங்கள் பிடித்துள்ளன.
தென்னிந்திய திரையுலகம், பான் இந்தியா படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
சமீபகாலமாக பாலிவுட் திரையுலகம், தென்னிந்திய திரைப்படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதிலும், அந்தப் படங்களை இந்தியில் ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கு முன்னோடியாக அமைந்தது திரைப்படம் எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான பாகுபலி படம் தான்.

பீஸ்ட்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியானத் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய் வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் ரா பிரிவு ஏஜென்டாக நடித்துள்ளார். ஒரு ஷாப்பிக் மாலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து அங்கு இருப்பவர்களை பிணைக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்டு மிரட்டுகின்றனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் அரபிக்குத்து ,ஜாலியோ ஜிம்கானா மிகப்பெரிய அளவில் டிராண்டானது. மாலேசியாவில் பீஸ்ட் திரைப்படம் 5.95 வசூலாகி முதலிடத்தில் உள்ளது.

கேஜிஎஃப் 2
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான பான் இந்தியா படம் 'கேஜிஎஃப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் வெளியான 4 நாட்களில் 5.64 கோடியை வசூலித்து 2 இடத்தில் உள்ளது.

வலிமை
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் வெளியானத் திரைப்படம் வலிமை. பைக் ரோலில் நடக்கும் வழிபறி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்ட இப்படத்தில்,அம்மா மற்றும் தம்பி சென்டிமெண்ட் தூக்கலாக உள்ளது. இத்திரைப்படம் 3வது இடத்தில் உள்ளது.

ஆர்.ஆர்.ஆர்
ராஜமௌலி இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர்.தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என தெலுங்கு சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களை களம் இறக்கியுள்ளார். பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் பீஸ்ட் வெளியிட்டுக்கு பிறகு பின்னுக்கு சென்றுள்ளது.

எதற்கும் துணிந்தவன்
இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சூர்யாவின் கூட்டணியில் வெளிவந்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டைன்மென்ட், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் மலேசியா பாக்ஸ் ஆபிஸில் தென்னிந்திய படங்கள் லிஸ்டில் 5வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











