ப்பா.. தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புதுக் காலை.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: நெட்பிளிக்ஸில் முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கிய லஸ்ட் ஸ்டோரிஸ் போல தமிழில் டாப் 5 இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புதுக் காலை விரைவில் வெளியாகிறது.

அமேசான் பிரைமின் ஒரிஜினல்ஸ் ஆன இந்த புத்தம் புதுக் காலை படத்தை ஆண் இயக்குநர்கள் மற்றும் பெண் இயக்குநர்கள் இணைந்து இயக்கி உள்ளனர்.

சில்லுக்கருப்பட்டி படத்தை போல, சின்ன சின்ன தனிக் கதைகளாக இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் யார்?

யார் யார்?

அமேசான் பிரைம் ஒரிஜினல் படமான புத்தம் புதுக் காலை படத்தை சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் டாப் 5 பிரபல இயக்குநர்கள் இயக்கத்தில் உருவான கதைகள் ஒன்றிணைந்து ஒரே படமாக வெளியாகிறது.

5 ஷார்ட் பிலிம்

5 ஷார்ட் பிலிம்

காபி டம்ளருடன் சுஹாசினி மணிரத்னம் ஒரு கதை சொல்ல உள்ளார். தற்கொலையா? கொலையா? என்ற ரீதியில் ராஜீவ் மேனன் ஒரு கதை சொல்லப் போகிறார். இசையை வைத்து படு ரொமாண்டிக்காக கெளதம் மேனனின் குறும்படம் இருக்கும். சுதா கொங்கரா குடும்ப அன்யோன்யத்தை படமாக்கி உள்ளார் என்று தெரிகிறது. ஆக்‌ஷன் கதையை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

வரும் அக்டோபர் 16ம் தேதி 200 நாடுகளிலும் ஒரே சமயத்தில் இந்த புத்தம் புதுக் கலை ரிலீசாக உள்ளது. அது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகளின் விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இசையமைப்பாளர் யார்

இசையமைப்பாளர் யார்

இந்த 5 தனிக் கதைகளுக்கும் ஒரே இசையமைப்பாளர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் நம்ம ஜி.வி. பிரகாஷ் என்பது சூப்பரான விசயம். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான ட்வீட்டை போட்ட அவர், புத்தம் புதுக் காலை ரிலீசுக்காக ரொம்ப ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

சூரரைப் போற்றுக்கு முன்பாகவே

சூரரைப் போற்றுக்கு முன்பாகவே

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் வரும் அக்டோபர் 30ம் தேதி சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீசாக உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே சுதா கொங்கராவின் அடுத்த இயக்கத்தை ரசிகர்கள் வரும் அக்டோபர் 16ம் தேதியே கண்டு ரசிக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X