தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து.. பட்டைய கிளப்பிய டாப் 5 படங்கள்!

சென்னை: தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளி வந்துள்ளன. அவற்றில் பெரும் வெற்றி பெற்ற சில படங்களை காணலாம்..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில படங்கள் மக்களின் ஆதரவோடு பெரும் வெற்றி பெரும்.

சில படங்கள் வந்த சுவடே தெரியாமல் போய்விடும். வெளியாகும் படங்களில் சில முழுக்க முழுக்க இயக்குநரின் கற்பனையிலேயே உதித்திருக்கும். சில படங்கள் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இருக்கும்.

உண்மை சம்பவங்கள்

உண்மை சம்பவங்கள்

அந்த வகையில் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் செம ஹிட்டான சில படங்கள் குறித்த ஒரு தொகுப்பை காணலாம். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இருந்து கார்த்திக்கின் தீரன் அதிகாரம் ஒன்று வரை சில படங்கள் நின்று பேசின.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. எளிமையான மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்பபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது இந்தப் படம். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார். திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது அவரது தலையில் அடிபட்டு சமீபத்திய நிகழ்வுகளை மறந்துபோவார் விஜய் சேதுபதி. பாலாஜி தரனிதரன் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் இப்படம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

வனயுத்தம்

வனயுத்தம்

அடுத்து வனயுத்தம்.. 2013ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இந்தப் படம் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது, மேலும் இது பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. வீரப்பன் வேடத்தில் பிரபல நடிகர் கிஷோர் நடித்தார். டிஜிபி கே விஜய் குமார் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடித்திருந்தார். ஏ.எம்.ஆர் ரமேஷ் இயக்கிய இந்தப் படத்தில் ராய் லக்ஷ்மி, விஜயலட்சுமி, சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விசாரணை

விசாரணை

அடுத்து விசாரணை.. 2015ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை பிரபல இயக்குநரான வெற்றிமாறன் இயக்கியிருந்தார். எம் சந்திரகுமாரின் லாக்அப் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தனர். பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்ற இப்படம் சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளை பெற்றது. இப்படத்தில் தினேஷ், முருகதாஸ், சமுத்திரகனி, மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

அடுத்து பிச்சைக்காரன்.. இப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆன்டனி மற்றும் சட்னா டைட்டஸ் ஆகியோர் நடித்திருந்தனர். தீபா ராமானுஜம் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருந்தார். மரண படுக்கையில் இருக்கும் தனது தாயை காப்பாற்றுவதற்காக ஒரு மகன் 48 நாட்கள் ரகசியமாக பிச்சைக்காரரை போல் வாழ்வதாக இப்படம் உருவாக்கப்பட்டது. இயக்குநர் சசி தான் கேள்விப்பட்ட உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி காதல், ஆக்ஷன் என உணர்ச்சிகரமான இப்படத்தை கொடுத்தார்.

Recommended Video

Kaka Muttai சின்ன பசங்க இப்போ Hero மாறி இருக்காங்க | Dhanush
தீரன் அதிகாரம்

தீரன் அதிகாரம்

அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று.. 2017ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் ஹெச் வினோத் ஆபரேஷன் பவேரியா கேஸை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருந்தார். அவரது இந்த படைப்பை பார்த்து மெய் சிலிர்த்தனர் ரசிகர்கள். நடிகர் கார்த்தி டிஎஸ்பி தீரன் திருமாறன் என முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அபிமன்யு சிங் ஆன்ட்டி முக்கிய எதிரி ரோலில் நடித்தார். இந்தப் படம் பெரும் பாராட்டை பெற்றது. மேலும் இது கார்த்தியின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது. இந்த படத்தில் துணிச்சலான தனது கதாபாத்திரத்திற்காக கார்த்தி சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X