எல்லை மீறிய தகாத உறவை அம்பலப்படுத்திய 5 படங்கள்.. லிஸ்ட்டில் என்ன என்ன படங்கள் இருக்குன்னு பாருங்க!

சென்னை: சின்னத்திரையை எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட சீரியல்கள் கள்ளக்காதலை மையப்படுத்தியே பல ஆண்டுகளாக ஓடி வருகின்றன. ஆனால், சினிமாவில் இது அடிக்கடி வந்தால் சர்ச்சைகள் பெரிதாக கிளம்பும் என்பதால் அத்தி பூத்தது போல எப்போதாவது தான் வெளியாகும்.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அவ்வப்போது வெளியாகி உள்ளன.

இதில், அதிக சர்ச்சைகளை சந்தித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த 5 படங்கள் குறித்து இங்கே பார்ப்போம்..

வாலி

வாலி

1999ம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த வாலி திரைப்படம் வெளியானது. நடிகர் அஜித் இந்த படத்தில் அண்ணன், தம்பி என டபுள் ஆக்‌ஷனில் நடித்து மிரட்டி இருப்பார். தம்பியின் மனைவியை மாற்றுத்திறனாளியான அண்ணன் அடைய ஆசைப்படும் கதையில் நடிகர் அஜித் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பினாலும், ஹீரோவாகவும் இந்த படத்தில் அஜித் நடித்த நிலையில், வேற லெவல் ஹிட் அடித்தது.

ஆர்யாவின் கலாபக் காதலன்

ஆர்யாவின் கலாபக் காதலன்

கடந்த 2006ம் ஆண்டு இயக்குநர் இகோர் இயக்கத்தில் ஆர்யா, ரேணுகா மேனன், அக்‌ஷயா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த படம் கலாபக் காதலன். வாலி படத்தில் தம்பி மனைவியை அண்ணன் ஆசைப்படுவது போலவே இந்த படத்தில் அக்கா ரேணுகாவின் கணவர் ஆர்யாவை தங்கையாக நடித்த அக்‌ஷயா விரும்புவது போல வித்தியாசமான தகாத உறவுமுறை படமாக இந்த படம் உருவானது. படம் வெளியான சமயத்தில் ஏகப்பட்ட ட்ரோல்களையும் கடும் விமர்சனங்களையும் இந்த படம் சந்தித்தது.

உயிர்

உயிர்

2006ம் ஆண்டு இயக்குநர் சாமி இயக்கத்தில் சங்கீதா, ஸ்ரீகாந்த், சம்விருதா சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் உயிர். அஜித்தின் வாலி படத்தில் தம்பியின் மனைவிக்கு அண்ணன் ஆசைப்படுவதை போல இந்த படத்தில் கணவரின் தம்பி ஸ்ரீகாந்தை அண்ணி சங்கீதா விரும்புவதாக சாமி இயக்கி சர்ச்சையை கூட்டினார். அம்மாவுக்கு அடுத்து அண்ணி என இருந்த தமிழ் சமூகத்தில் இப்படியெல்லாம் படம் எடுக்கலாமா என வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்களே இந்த படத்துக்கு எதிர்ப்பு தெவித்து இருந்தனர்.

அமலா பாலின் சிந்து சமவெளி

அமலா பாலின் சிந்து சமவெளி

இயக்குநர் சாமி இயக்கத்தில் 2010ல் வெளியான சிந்து சமவெளி திரைப்படம் மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் உறவை திரையில் காட்டி மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹரீஷ் கல்யான் மற்றும் அமலா பால் இருவரும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். படத்தில் ஏகப்பட்ட ஆபாசக் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், பெரும் சர்ச்சைகளை இந்த படம் எதிர்கொண்டது.

மனிஷா யாதவின் ஒரு குப்பை கதை

மனிஷா யாதவின் ஒரு குப்பை கதை

நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடிக்க வழக்கு எண் 18/9, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்த இளம் நடிகை மனிஷா யாதவ் நடித்த ஒரு குப்பைக் கதை திரைப்படத்திலும் கள்ளக்காதல் உறவு தாண்டவம் ஆடியிருக்கும். குப்பைத் தொழிலாளியின் மனைவியாக நடித்த மனிஷா அழகான கணவர் தனக்கு கிடைக்கவில்லையே என நினைத்துக் கொண்டிருக்க, இன்னொரு அழகான வாலிபருடன் நெருக்கம் ஏற்படும் கதையை இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கி இருப்பார். இந்த படம் கடந்த 2018ல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X