Vijay: இந்தியாவில் அதிக வரி செலுத்தும் ஸ்டார்ஸ்.. அட இதுலயும் தளபதி மாஸ்தான்!

சென்னை: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் வரிப்பணமே முக்கியமான காரணங்களாக அமைந்து வருகின்றன. இந்த வரிப்பணத்தை செலுத்துவதில் ஏய்ப்பை நடத்தும் நபர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி வருவதை பார்க்க முடிகிறது. அனைத்து விஷயங்களிலும் மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்துவரும் பிரபலங்கள், நடிகர்கள் இந்த விஷயத்தில் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் கோடிக்கணக்கான சம்பளம் பெறும் முன்னணி நடிகர்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய அளவில் அதிகமாக வரி செலுத்தும் முதல் ஐந்து நபர்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம். இதில் பாலிவுட்டை சேர்ந்தவர்கள் அதிகமான இடத்தை பிடித்துள்ள நிலையில் தென்னிந்திய அளவில் நடிகர் விஜய்யும் இடம்பெற்றுள்ளார்.

அதிக வரி செலுத்தும் 5 நபர்கள்: சர்வதேச அளவில் வரிப்பணம் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ள நிலையில் இந்தியாவிலும் அது சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சிறியது முதல் பெரியது வரையில் தாங்கள் வாங்கும் பொருட்கள், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்திற்கும் வரிப்பணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்திய அளவில் அதிகமாக வரி செலுத்தும் நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் ஐந்து இடங்களில் உள்ளவர்கள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துக் கொள்ளலாம். வரிப்பணமே இவ்வளவு கோடிகள் என்றால் அவர்களின் வருமானமும் சிறப்பானது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வரிப்பணத்தை முறையாக செலுத்துவது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம்.

vijay shah rukh khan

ஐந்தாவது இடத்தில் விராட் கோலி: அதிக வரி செலுத்தும் தனிநபர் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளவர் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான். முன்னாள் இந்திய கேப்டனும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் கணவருமான விராட் கோலி 66 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். இதன்மூலம் இவர் இந்தப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலும் இவர் 21 கோடி ரூபாய்களுக்கு ஆர்சிபி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக இவர் மாஸ் காட்டி வருகிறார்.

vijay shah rukh khan

4வது இடத்தில் அமிதாப்பச்சன்: இதையடுத்து அதிக வரி செலுத்துபவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளவர் பிரபல பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் 71 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவரும் அமிதாப்பச்சன் நடிப்பில் சமீபத்தில் கல்கி 2898 ஏடி மற்றும் வேட்டையன் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. கவுன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியையும் இவர் பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். 80 வயதை கடந்த நிலையிலும் அதிகமான வரி செலுத்துபவராக இவர் உள்ளார்.

vijay shah rukh khan

3வது இடத்தில் சல்மான் கான்: இந்தப் பட்டியலில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளார். இவர் 75 கோடி ரூபாய் வரியாக செலுத்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் தொகுப்பாளராக வலம்வரும் இவர், இந்த நிதியாண்டில் அதிகமான வரி செலுத்தியுள்ளார். அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் இவர் படத்தில் நடித்து வருகிறார். 50 வயதை கடந்த நிலையிலும் இன்னும் ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

vijay shah rukh khan

2வது இடத்தில் தளபதி விஜய்: அதிகமான தனிநபர் வரி செலுத்தும் இந்தப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். தென்னிந்திய அளவிலும் அதிகமான வரி செலுத்துபவராக இவர் உள்ளார். ஒரு படத்திற்கு இவரது சம்பளம் 200 கோடிகளை தாண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் இவர் இந்த நிதியாண்டில் 80 கோடி ரூபாய் வரி செலுத்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் தவெக கட்சியை துவங்கியுள்ள நிலையில், தன்னுடைய இறுதிப்படமான தளபதி 69 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

vijay shah rukh khan

டாப்பில் ஷாருக்கான்: அதிகமாக வரி செலுத்தும் தனிநபர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் பாலிவுட் பாட்ஷாவாக வலம்வரும் ஷாருக்கான்தான். கிங் கான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், பாலிவுட்டில் அதிகமான சம்பளம் வாங்குவதுடன் அதிகமான வரி செலுத்துபவராகவும் காணப்படுகிறார். இந்த நிதியாண்டில் இவர் 92 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டிலேயே இவரது நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியான நிலையில், இவற்றில் பதான் மற்றும் ஜவான் படங்கள் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருந்தன. தயாரிப்பாளராகவும் வசூலை அள்ளி வருகிறார் ஷாருக்கான். அதிகமான வரி செலுத்துவதன்மூலம் இவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X