கேரளாவில் ரிலீஸாகி கல்லாக்கட்டிய தமிழ் படங்கள் எவை எவை.. இன்றைய டாப் பீட்ஸ் ஃபைவில்!
சென்னை: மலையாள தேசத்தில் கல்லாக்கட்டிய படங்கள் எவை எவை என்பது குறித்த சுவாரசிய தகவல் இன்றைய டாப் பீட்ஸ் ஃபைவில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான அப்டேட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் குறித்த அப்டேட்ஸ்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

அவற்றில் சிறப்பான தகவல்களை பிகே நமது பிலிமி பீட் தமிழ் தளத்தில் வீடியோவாக அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று கேரளாவில் ரிலீஸாகி கல்லாவை நிரப்பிய படங்கள் குறித்த தகவல்களை வழங்கியிருக்கிறார்.
அதன்படி நடிகர் விஜயின் பிகில் படம் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தில் கார்த்தியின் கைதி படமும் மூன்றாவது இடத்தில் ரஜினியின் பேட்ட படமும் நான்காவது இடத்தில் சூர்யாவின் காப்பான் படமும் உள்ளன. மம்மூட்டியின் பேரன்பு படம் 5வது இடத்தை பிடித்திருக்கிறது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இரண்டு ஆசைகள், தமிழ் சினிமாவில் பிளாப் ஆன படங்கள், சரவணா ஸடோர் அண்ணாச்சியின் படம் குறித்த முக்கிய தகவல்கள் உள்ளிட்ட பல அப்டேட்ஸ்கள் இன்றைய டாப் பீட்ஸ் ஃபைவில் உங்களுக்காக..


Click it and Unblock the Notifications











