எக்ஸ்பீரியன்ஸே இல்லை அப்புறம் எப்படி?.. எஸ்கேப் ஆகும் டாப் நடிகர்கள்?.. திணறும் விஜய் மகன்?

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி அதற்குபின் படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை; எந்த மூவ்மெண்ட்டும் இல்லை. இதனால் அந்தப் படம் என்ன ஆனது என்பது குறித்து ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது. சூழல் இப்படி இருக்க ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் நடிகர் விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 69ஆவது படமாக உருவாகும் அதுதான் தனது கடைசி படமாக இருக்கும் என்றும் அவர் அறிவித்துவிட்டார். அந்தப் படத்தை முடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Top actors are not interested in acting in a film directed by Vijay s son Jason Sanjay

விஜய்யின் வாரிசு: விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருப்பது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு வந்திருப்பதுதான். ஆனால் தனது தந்தை போல் நடிகராக இல்லாமல் தாத்தா போல் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்திருக்கும் ஜேசன் ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் என்ட்ரி: ஜேசன் சஞ்சய்க்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் அவர் படம் இயக்க வருவது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அதிலும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகாவின் பேனரில் அவர் தனது முதல் படத்தை இயக்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதற்கிடையே ஜேசன் சஞ்சய் இந்த வயதிலேயே சினிமா இயக்குவது விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும்; அதனால்தான் இந்த விஷயத்தில் அவர் மௌனம் காத்துவருகிறார் என்றும் கிசுகிசு ஓடியது கவனிக்கத்தக்கது.

கவினுடன் பேச்சுவார்த்தை: ஜேசன் சஞ்சய் இயக்கப்போகிறார் என்றதும் யார் ஹீரோ என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. முதலில் விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இப்போது ரைசிங் ஸ்டாராக இருக்கும் கவினிடம் படம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதனை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருந்தார். ஆனால் அது பேச்சுவார்த்தையோடு நின்று போனது. அதேபோல் ஷங்கர் மகள் அதிதி நடிப்பதற்கும்; ஏ.ஆர்.ரஹ்மான் பையன் அமீன் இசையமைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

எஸ்கேப் ஆகும் நடிகர்கள்?: இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க ஹீரோக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த சின்ன வயதில் ஒரு முழு படத்தை நல்லபடியாக இயக்கி முடித்திட முடியுமா? அதற்கான அனுபவம் அவருக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் டாப் நடிகர்களுக்கு வந்துவிட்டதாம்.ஜேசன் சஞ்சய் சில டாப் நடிகர்களை சந்தித்து கதை கூறியதாகவும்; ஆனால் மேற்கூறிய காரணத்தை மனதில் வைத்து அவர்கள் நைஸாக நழுவுகிறார்கள் என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள். முதல் படத்திலேயே டாப் ஹீரோவை வைத்து இயக்கினால் வியாபாரத்திற்கு பிரச்னை இருக்காது என்று ஜேசன் நினைப்பதாகவும்; ஆனால் எல்லோரும் நழுவுவதால் இப்போது அவர் திணறிவருவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இது ஒருபக்கம் இருக்க படம் டேக் ஆஃப் ஆகாததற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது லைகா இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அதனால் இந்தப் படத்தை கொஞ்சம் தள்ளி வைத்திருப்பதாகவும் முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X