தமிழ் சினிமாவில் மண்ணை அள்ளிப்போடுவது டாப் நடிகர்கள் தான்.. போஸ் வெங்கட் பரபரப்பு பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் மண்ணை அள்ளிப்போடுவது டாப் நடிகர்கள் தான் என்று போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசி உள்ளார்.

நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக உள்ளார். சன் டி.வியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

சின்னத்திரை மட்டுமல்லாது சினிமாவில், துணை நடிகராகவும், வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

Top actors are the cause of Tamil cinemas demise, Bose Venkat interview

போஸ் வெங்கட் பேட்டி: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த, போஸ் வெங்கட், சினிமாவில் சாதி சமீபகாலமாக திணிக்கப்பட்டு வருகிறது. முன்பு இருந்த இயக்குநர்கள் சாதியை பற்றி படம் எடுத்தாலும், அதில் இது போன்ற கொடுமை நடக்கிறது என்று தான் படம் எடுத்தார்கள். இப்போது இருக்கும் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் எனக்கு இதுபோன்ற கொடுமை நடந்தது, அதை பாருங்கள் என்று படம் எடுக்கிறார்கள்.

பணத்திற்காக சினிமா: இந்த சாதிய சினிமாவால் தான் பிரச்சனை வந்துவிடும் என்று நாங்கள் பயந்துக்கொண்டு இருந்தோம். ஆனால்,இப்போது வரும் சினிமாவில் எதுவுமே இல்லை. முக்கிய முதலாளிகள் மட்டுமே ஒன்று சேர்ந்து பண நோக்கத்திற்காக சினிமா எடுக்கப்படுகிறது. முக்கிய நடிகர்களை படத்தில் போட்டு ஒட்டுமொத்த விளம்பரத்தை கையில் வைத்துக்கொண்டு, தியேட்டரில் படத்தை வெளியிட்டு, மொத்த பணத்தையும் அள்ளிவிடுகிறார்கள்.

தமிழ் சினிமாவின் நிலை: ஆயிரம் தியேட்டரில் ஒரு நாளைக்கு ஒரே படத்தை நான்கு காட்சிகள் போட்டு ரசிகர்களை படம் பார்க்க திணிக்க வைக்கப்படுகிறார்கள். இதனால், சிறு பட்ஜெட் படத்தை பார்க்க ஆள் இல்லை. ரசிகர்கள் இப்போது பெரிய படத்திற்கு அடிமையாகி விட்டார்கள். இந்த நிலைக்குத்தான் தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இல்லை: ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலத்தில் பெரிய ஸ்டார் நடிகராக இருக்கக்கூடியவர்கள், 400 கோடி அளவில் பட்ஜெட் பெரிய படத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் சிறு பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது. அதே நேரம், டாப் நடிகர்களும் சிறு நடிகர்களின் படத்தை பாருங்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த சூழ்நிலை தமிழ் சினிமாவில் இல்லை.

மண்ணை அள்ளிப்போடுவார்கள்: டாப் நடிகராக இருக்கும் விஜய் சிறு பட்ஜெட் படத்தை தயாரித்து சிறுநடிகர்களுக்கு வாழ்க்கை கொடுக்கக்கூடாதா… சினிமாவில் இருக்கும் விஜய்க்கு இந்த எண்ணம் வரவில்லை. இந்த எண்ணம் இல்லாத விஜய் அரசியலுக்கு வந்த என்ன செய்யப்போகிறார். தமிழ் சினிமா அழிய காரணமாக இருக்கக்கூடிய மாபெரும் நடிகர்கள், மாபெரும் தயாரிப்பாளர்களால்தான் தமிழ் சினிமாவில் மண்ணை அள்ளிப்போடப்போகிறார்கள். அவர்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று போஸ் வெங்கட் அந்த பெட்டியில் ஆவேசமாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X