செம க்யூட் போங்க.. அஜித் முதல் விஷால் வரை.. இந்த ரேர் போட்டோஸ் பாத்திருக்கீங்களா!
சென்னை: அஜித் முதல் விஷால் வரையிலான நடிகர்களின் அரிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
Recommended Video
திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகையும், சினிமாவுக்கு முன் சினிமாவுக்கு பின் என பெரிய மாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.
எப்போதுமே சினிமா நட்சத்திரங்களின் இளவயது போட்டோக்களையும் சினிமாவுக்கு வருவதற்கு முந்தைய அவர்களின் வாழ்க்கையை பற்றியும் அறிந்து கொள்ள ரசிகர்கள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரிய போட்டோஸ்
அந்தவகையில் ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் சில முன்னணி நடிகர்களின் இளம்வயது போட்டோக்களும் சில அரிய போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

அஜித் போட்டோ
நடிகர் அஜித்தின் இந்த அரிய போட்டோ வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் படப்பிடிப்புகளுக்காக பல இடங்களுக்கு செல்லும் போது, போட்டோக்கள் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் நடிகர் அஜித் கேமராவுடன் இருக்கும் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இந்தப் போட்டோ அசல் படப்பிடிப்பின் போது எடுத்ததாக தெரிகிறது.

நடிகர் விஜய்..
நடிகர் விஜயின் இந்த அறிய போட்டோவும் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் விஜய் சிறு வயது பையனாக உள்ளார். தனது அம்மா மற்றும் தனது தங்கையுடன் உள்ளார் விஜய். விஜயின் தங்கை தனது அண்ணனுக்கு பின்னால் நின்றப்படி அவரது தலை மீது கைகளை வைத்து சாய்ந்துள்ளார்.

நடிகர் விக்ரம்
அடுத்து நடிகர் விக்ரம்... விக்ரம் இந்த போட்டோவில் மிகவும் இளமையாக உள்ளார். அவரது பதின் பருவத்தில் எடுக்கப்பட்ட போட்டோ என்று தெரிகிறது. அவர் சினிமாவுக்குள் நுழையும் முன்பு இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அரும்பு மீசையுடன் ஒல்லியாக உள்ளார் விக்ரம். சட்டென பார்க்கும் போது அவரது மகன் துருவை பார்ப்பது போன்றே உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி
அடுத்து நடிகர் விஜய் சேதுபதி.. இந்த போட்டோ நடிகர் விஜய் சேதுபதியின் பள்ளிப் பருவத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என தெரிகிறது. நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பாக பல க்ரெடிட் இல்லாத ரோல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி..
அடுத்து நடிகர் ஜெயம் ரவி.. ஜெயம் ரவி சிறு வயது பையனாக இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ இது என தெரிகிறது. ஜெயம் ரவி, தனது அம்மாவை கட்டியணையத்தப்படி இந்த போட்டோவில் போஸ் கொடுத்துள்ளார். ஜெயம் ரவி பல தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நடிகர் விஷால்
அடுத்து நடிகர் விஷால்.. நடிகர் விஷால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ இது என தெரிகிறது. இந்த போட்டோவில் தனது அண்ணனுடன் உள்ளார் விஷால். இதில் அவரது அண்ணனை விடவும் தைரியாமாவும் சிரித்தப்படியும் உள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











