மேன் ஆஃப் த மாஸஸ்.. 'தலை' க்கு வாழ்த்து மழை பொழியும் நடிகைகள்.. யாருன்னு பாருங்க!

சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் நடிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களுக்கு போட்டியாக சினிமா பிரபலங்களும் நடிகர் அஜித்துக்கு தங்களின் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித்துடன் எடுத்த போட்டோக்களையும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

வரலக்ஷ்மி சரத்குமார்

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், மேன் ஆஃப் தி மாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து.. சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள் அஜித் சார் என பதிவிட்டுள்ளார்.

அந்த தருணங்கள்..

இதேபோல் நடிகை சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், எப்போதெல்லாம் நான் உங்கள் பெயரை கேட்கிறேனோ அப்போதெல்லாம் விஸ்வாசம் படத்தின் தருணங்கள் தான் என் நினைவுக்கு வருகிறது. எவ்வளவு தாழ்மையாக இருந்தீர்கள்.. நீங்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் பாஸிட்டிவ் எனர்ஜியை கொண்டு வருகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகை ஆர்த்தி

இதேபோல் நகைச்சுவை நடிகையான ஆர்த்தி பதிவிட்டுள்ள ட்வீ ட்டில்,
பல கோடி பேர்களின் விசுவாசம்
தன்னம்பிக்கையின் கிரீடம்
நேர்மையின் முகவரி
அரசியல் மங்காத்தாக்களின் வில்லன்
விரைவில் தமிழகத்தின்
வலிமை முதல்வன்
காதல் கோட்டையில் மட்டுமல்ல ஜார்ஜ் கோட்டையிலும் உங்கள் வெற்றி கொடி பறக்கும்
இதுவே எங்கள் ஆசை
ஆகட்டும் வரலாறு ஆரம்பம்.. என பதிவிட்டுள்ளார்.

நடிகை ராய் லக்ஷ்மி

நடிகை லக்ஷ்மி ராய் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், மற்றொரு டாரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய ஃபேவரைட் தல அஜித்துடன் பணியாற்றுவதும் அவரது எளிமையை அறிந்து கொள்வதும் முழுமையான மகிழ்ச்சி! எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு டாரியன் சிறந்த அன்பையும் மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

அம்ரிதா ஐயர்

இதேபோல் பிகில் நடிகை அம்ரிதா ஐயரும் நடிகர் அஜித்துக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்முடைய டியர் தல அஜித் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என பதிவட்டுள்ளார்.

Recommended Video

VALIMAI First Look Update | SHOCKING! படக்குழு எடுத்த அதிரடி முடிவு

பார்வதி நாயர்

இதேபோல் நடிகை பார்வதி நாயர் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் தல அஜித் சார். நீங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கைக்கு ஒரு பசுமையான உத்வேகம். என்னை அறிந்தால் படத்தில் உங்களுடன் பணிபுரிந்தது என்னால் இன்னும் மறக்க முடியாத ஒரு கனவு. வலிமையுடன் தொடருங்கள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X