நெட்ப்ளிக்ஸ்-க்காக ஒன்றிணையும் முன்னணி இயக்குனர்கள்.. டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன், கௌதம்மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா என அனைவரும் இப்பொழுது நெட்ப்ளிக்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் இணைய உள்ளனர்.

கொரானா சூழல் பலரையும் பல்வேறு விதங்களில் மாற்றியிருக்கும் நிலையில் இப்பொழுது அந்தோலஜி திரைப்படங்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

இந்த வகையில் சமீபத்தில் சில்லு கருப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது 4 முன்னணி இயக்குனர்கள் நெட்பிளிக்ஸ்-க்காக முதல் முறையாக ஒன்றிணைந்து உள்ளனர்.

அந்தோலஜி திரைப்படங்களின் வருகை

அந்தோலஜி திரைப்படங்களின் வருகை

சென்ற ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில்
அதைத் தொடர்ந்து அந்தோலஜி திரைப்படங்களின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முன்னணி இயக்குனர்கள்

முன்னணி இயக்குனர்கள்

இந்த வகையில் பிரபலமான பல ஓடிடி நிறுவனங்களுக்கு தமிழ் இயக்குனர்கள் தொடர்ந்து பல்வேறு அந்தோலஜி திரைப்படங்களை இயக்கும் நிலையில் இப்பொழுது நெட்ப்ளிக்ஸ்-க்காக முதன்முறையாக இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் என முன்னணி இயக்குனர்கள் இணைந்து உள்ளனர்.

 4 இயக்குனர்கள் ஒன்றிணைந்து

4 இயக்குனர்கள் ஒன்றிணைந்து

உலக அளவில் மிகப் பிரபலமான ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தமிழில் முதன்முறையாக தயாரிக்கும் அந்தோலஜி திரைப்படத்திற்கு "பாவ கதைகள் " என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில்
4 இயக்குனர்கள் ஒன்றிணைந்து நான்கு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர்களாக அஞ்சலி சாய்பல்லவி, சாந்தனு பாக்யராஜ், பவானி ஸ்ரீ, ஹரி, காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், சிம்ரன் என பலர் நடிக்க உள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

சூரரைப்போற்று, வாடிவாசல், துருவ நட்சத்திரம், காத்துவாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்த திரைப்படங்கள் இந்த இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இப்பொழுது இவர்கள் நெட்ப்ளிக்ஸ்-க்காக ஒன்றாக இணையும் "பாவ கதைகள் " திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளதால் அதன் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X