கேஎஸ் ரவிக்குமார் முதல் விக்னேஷ் சிவன் வரை.. படங்களில் பெயர் தெரியாமல் நடித்த டாப் தமிழ் டைரக்டர்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் கிரெடிட் இல்லாத ரோல்களில் நடித்துள்ள பிரபல இயக்குநர்கள் குறித்து ஓர் பார்வை..

Recommended Video

Ponmagal Vanthal Director JJ.Fredrick Emotional • Surya Jothika • 2D Entertainments

தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகி வருகிறது. அதே போல் ஏராளமான இயக்குநர்களும் அறிமுகமாகி வருகின்றனர்.

சில இயக்குநர்கள் தங்களை தாங்களே பட்டைத் தீட்டி தயாரிப்பாளர்களாவும் வளர்கிறார்கள்.

சிறு கதாப்பாத்திரம்

சிறு கதாப்பாத்திரம்

அப்படி வளரும் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களிலும் லீடிங் ஹீரோவாகவும், முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதுபோன்று அடையாளம் தெரியாமல் திரையில் வந்து சென்று இன்று பெரும் செலிபிரிட்டியாகவும் டாப் இயக்குநராகவும் வலம் வரும் பிரபலங்கள் குறித்து பார்ப்போம்..

கேஎஸ் ரவிக்குமார்

கேஎஸ் ரவிக்குமார்

அந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். ரஜினி, கமல், அஜித், விஜய் என உச்ச நட்சத்திரங்கள் பலரையும் இயக்கியிருக்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படங்களை வழங்குவதில் பிரபலமானவர் கேஎஸ் ரவிக்குமார். ஆனால் அவர் முதலில் விக்ரமன் இயக்கிய 'புது வசந்தம்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். இந்தப் படத்திலேயே செக்யூரிட்டியாக நடித்திருப்பார். அதுமுதல் தற்போது வரை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு சிறு கதாப்பாத்திரத்திலாவது வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

இதேபோல் இயக்குநர் ஷங்கர். பிரமாண்ட இயக்குநர் என போற்றப்படும் இயக்குநர் ஷங்கர், ரஜினி, கமல், விக்ரம் என பல டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இயக்குநராக அறிமுகம் ஆவதற்கு முன்பே, பூவும் புயலும், வசந்த ராகம், சீதா உள்ளிட்ட பல படங்களில் அன்கிரெடிட்டட் ரோல்களில் நடித்துள்ளார். சிவாஜி, எந்திரன், நண்பன் ஆகிய படங்களிலும் தோன்றியிருக்கிறார்.

ஏஆர் முருகதாஸ்

ஏஆர் முருகதாஸ்

அடுத்து ஏஆர் முருகதாஸ்.. நடிகர் அஜித்தின் தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான படம் ரஜினிகாந்தின் தர்பார். ஏஆர் முருகதாஸும் பல படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து சென்றுள்ளார். உதயசங்கர் இயக்கத்தில் வெளியான பூச்சூடவா என்ற படத்தில் முதல் முறையாக ஸ்க்ரீனில் தோன்றினார் ஏஆர் முருகதாஸ். விஜயின் கத்தி படத்திலும் நடித்திருப்பார் ஏஅர் முருகதாஸ்.

இயக்குநர் பேரரசு

இயக்குநர் பேரரசு

அடுத்து இயக்குநர் பேரரசு.. கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் வல்லவரான இயக்குநர் பேரரசு, அஜித், விஜய் ஆகிய மாஸ் நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார். விஜயின் திருப்பாச்சி படத்தின் முலம் இயக்குநராக அறிமுகமானார் பேரரசு. அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராக பணிபுரிந்த பேரரசு, எதிரும் புதிரும் என்ற படத்தில் கவுண்ட மணியுடன் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

அடுத்து இயக்குநர் வெற்றிமாறன்.. தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இவர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் தவறுவதில்லை. பெரும்பாலும் தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. பாலு மகேந்திராவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றி மாறன் பின்னர் இயக்குநர் கதிருடனும் பணியாற்றினார். அப்போது அவரது இயக்கத்தில் வெளியான காதல் வைரஸ் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

அடுத்து விக்னேஷ் சிவன்.. சிம்பு, வரலக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த விக்னேஷ் சிவன், தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதேபோல் கேஆர் செந்தில்நாதன் இயக்கத்தில் வெளியான சிவி படத்திலும் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X