3வது மனைவி.. ரஷ்யா மாடல்.. துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மனைவி பற்றி தெரியாத சில விஷயங்கள்!

ஹைதராபாத்: நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராக இன்று பவன் கல்யாண் பதவியேற்றுள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான பவன் கல்யாண் ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னேவா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தனது மனைவி மற்றும் மகனுடன் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில், தேர்தலில் வெற்றிப் பெற்றதும் தனது அண்ணன் சிரஞ்சீவியை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

ஆந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் கூட மோடி, அமித்சா, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுக்கு மரியாதை செலுத்திய பவன் கல்யாண் யார் காலிலும் விழாமல் தனது அண்ணன் காலில் மட்டுமே விழுந்து ஆசி பெற்றார். இந்நிலையில், அவரை போலவே அன்பும் பண்பும் கொண்டவராக அவரது மனைவி அன்னா லெஷ்னேவா உள்ளார். அவரை பற்றி தெரிந்திடாத சில விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

Pawan Kalyan Andhra Politics Chiranjeevi

யார் இந்த அன்னா லெஷ்னேவா?: 1980ல் ரஷ்யாவில் பிறந்த அன்னா லெஷ்னேவா ஒரு மாடல் அழகி ஆவார். 2011 ஆம் ஆண்டு "டீன் மார்" படப்பிடிப்பின் போது அவர் பவன் கல்யாணை சந்தித்தார். அவர்களின் ஆன்-செட் காதல் ஒரு உறவாக வளர்ந்தது, மேலும் அவர்கள் செப்டம்பர் 30, 2013 அன்று திருமணம் செய்து கொண்டனர். பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி தான் அன்னா லெஷ்னேவா என்பது குறிப்பிடத்தக்கது.

1800 கோடி வதந்தி: பவன் கல்யாண் மற்றும் அன்னா லெஷ்னேவா தம்பதிக்கு மார்க் ஷங்கர் பவோனோவிச் என்ற மகன் உள்ளார். பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான லெஷ்னேவாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆனது. முதல் திருமணத்திலிருந்து போலேனா அஞ்சனா பவனோவா என்கிற மகள் உள்ளார். மாடலிங் துறையில் பணியாற்றி வந்த லெஷ்னேவா சிங்கப்பூரில் ஹோட்டல்களை நடத்தி வருவதாகவும் ரஷ்யா மற்றும் சிங்கப்பூரில் சுமார் ₹1800 கோடிக்கு சொத்துக்களை வைத்திருப்பதாக வதந்தி பரவுகிறது.

3 முறை திருமணம்: தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என கொண்டாடப்படும் பவன் கல்யாண் 1997ல் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார், 2008ல் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடிகை ரேணு தேசாய் என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அகிரா நந்தன் மற்றும் ஆதியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர், 2012ம் ஆண்டு சில பல பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். அன்னா லெஷ்னாவுடனான உறவு குறித்த தகவல் தெரிந்த பின்னர் தான் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. விவாகரத்து முடிந்த உடனே அன்னா லெஷ்னாவை பவன் கல்யாண் திருமணம் செய்துக் கொண்டார்.

Pawan Kalyan Andhra Politics Chiranjeevi

விவாகரத்து வதந்தி: வருண் தேஜ் நிச்சயதார்த்தம் மற்றும் ராம் சரண் மற்றும் உபாசனாவின் மகளின் தொட்டில் விழா போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் அன்னா லெஷ்னேவா பங்கேற்காத நிலையில், பவன் கல்யாண் 3வது மனைவியையும் விவாகரத்து செய்யப் போகிறாரா என வதந்திகள் பரவின. ஆனால், தொடர்ந்து தனது கணவருடன் அவருடைய அரசியல் மற்றும் பொது வாழ்க்கை எண்ணத்திற்கு உற்றத் துணையாக இருந்து வருகிறார்.

சினிமாவை விட்டு விலகுவாரா?: ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள பவன் கல்யாண் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. பிரியங்கா மோகன் உடன் இணைந்து ஓஜி படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஹரிஹர வீர மல்லு படமும் அவர் நடிப்பில் உருவாகி வருகிறது. அந்த படங்களை முடித்து விட்டு சினிமாவை விட்டு விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X