year ender 2023: இந்தாண்டு அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகைகள்.. இதிலும் நம்பர் ஒன் இவங்க தான்!

சென்னை: கோலிவுட்டில் முன்பெல்லாம் ஹீரோக்களுக்குத்தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிலைமாறி தற்போது கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023 நிலவரப்படி அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் யார் யார் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

Top five highest paid actresses of 2023 in kollywood cinema

நயன்தாரா: ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா ஒரு படத்திற்கு பத்து கோடி ரூபாயை சம்பளமாக பெருவதாக கூறப்படுகிறது. படத்தின் கதைக்கு ஏற்ப தனது முழு திறனையும் வெளிப்படுத்தி வரும் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. ஜவான், இறைவன், அன்னபூரணி படத்திற்கு நயன்தாரா பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தமன்னா: பால் போன்ற தேகத்தை கொண்ட தமன்னா, தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். இந்தாண்டு அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. இதில், ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு இவர் போட்ட ஆட்டத்தால் மீண்டும் டிரெண்டிங் நாயகியாக மாறினார். இவர் ஒரு படத்திற்கு ஐந்து கோடி முதல் ஏழு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சமந்தா சம்பளம்: நடிகை சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு யாசோதா, சாகுந்தலம், குஷி போன்ற திரைப்படங்கள் வெளியாகின இதில், சாகுந்தலம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வித் திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து விஜய்தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து துணிந்து நடிக்கும் சமந்தா, ஒரு படத்திற்கு நான்கு கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

த்ரிஷா: நடிகை த்ரிஷாவிற்கு வயசு ஏறஏறத்தான் படவாய்ப்பு குவிந்து வருகிறது. நடிகை திரிஷா இந்தாண்டு பொன்னியின் செல்வன் 2, லியோ என இரண்டு பெரிய படங்களில் நடித்திருந்தார். இதற்கு அவர் தலா ஐந்து கோடி ரூபாய் ஊதியம் பெற்றிருக்கிறார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்: அழகான க்யூட்டான நடிகையான கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்துள்ளதால், உடல் எடையை அநியாயத்திற்கு குறைத்து எலும்பாக இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் புரட்சி பெண்ணாக நடித்திருந்தார். இவர், ஒரு படத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X