மற்ற படங்களை ஓரங்கட்டிய டாப் கன் மேவரிக் படத்தின் கலெக்ஷன்... இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா?
சென்னை : நடிகர் டாப் க்ரூஸ் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ளது டாப் கன் மேவரிக் படம்.
Recommended Video
இந்தப் படம் 36 ஆண்டுகள் கழித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்து வருகிறது.
இந்தப் படம் கடந்த இரு தினங்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிசில் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

நடிகர் டாம் க்ரூஸ்
நடிகர் டாம் க்ரூசுக்கு தற்போது வயது 60ஐ நெருங்கியுள்ளது. ஆனாலும் மனிதர் தன்னுடைய உடலை சிறப்பாக வைத்துக் கொண்டுள்ளார். அவர் நடிப்பில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது டாப் கன் படம். இந்தப் படம் அந்தக் காலகட்டத்திலேயே சிறப்பான வசூலை குவித்தது.

டாப் கன் படத்தின் 2ம் பாகம்
கடந்த 1986ல் இந்தப் படம் வெளியானது. இந்நிலையில் தற்போது இதன் இரண்டாவது பாகமாக வெளியாகியுள்ளது டாப் கன் மேவரிக். இந்தப் படத்திலும் ஃபைட்டர் ஜெட் விமானியாகவே நடித்துள்ளார் டாம் க்ரூஸ். படத்தில் இடம்பெற்றுள்ள ஃபைட்டர் ஜெட் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

சிறப்பான வசூல்
இந்தப் படத்தில் எப்-18 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களை சூட்டிங்கின்போது பயன்படுத்துவதற்கென தயாரிப்பு தரப்பு ஒரு மணிநேரத்திற்கு 9 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் முதல் இரண்டு நாட்களிலேயே சிறப்பான வசூலை குவித்துள்ளது.

170 மில்லியன் டாலர்கள்
ஜோசப் கொசின்ஸ்கி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கானெல்லி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தில் போர் விமானங்களின் சாகசங்கள் அதிகமாக காணப்படுகிறது. 170 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் படம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் ரூ.2 கோடி வசூல்
ஆனால் படம் தற்போது சிறப்பு காட்சிகளுடன் கடந்த இரு தினங்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 33 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. மேலும் இந்தியாவில் நேற்றைய தினம் ரிலீசான நிலையில் ஒரே நாளில் 2 கோடி ரூபாயை தற்போது படம் வசூலித்துள்ளது.

4 நாட்களில் 125 மில்லியன் டாலர்கள் எதிர்பார்ப்பு
இந்நிலையில் இந்தப்படம் இந்த வார இறுதியையும் சேர்த்து முதல் நான்கு நாட்களில் 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள காட்சிகளுக்காக கடற்படையிடம் சிறப்பு அனுமதி வாங்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











