twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது ஒரு மணிநேரத்திற்கு இவ்வளவு லட்சங்கள் வாடகையா... மயக்கமே வந்துடும் போல இருக்கே!

    |

    சென்னை : நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் கடந்த 1986ல் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    ஏறக்குறைய 36 ஆண்டுகள் கழிந்து தற்போது அவர் நடித்துள்ள டாப் கன் மேவரிக் படத்திலும் சிறப்பான ஃபைட்டர் ஜெட் விமானியாக கலக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் எப் -18 உள்ளிட்ட பைட்டர் விமானங்களை அவர் பயன்படுத்தியுள்ளார்.

     கேரளா மாநில பிலிம் விருதுகள் - வெல்லப்போகும் நடிகர் நடிகைகள் யார்? கேரளா மாநில பிலிம் விருதுகள் - வெல்லப்போகும் நடிகர் நடிகைகள் யார்?

    நடிகர் டாம் க்ரூஸ்

    நடிகர் டாம் க்ரூஸ்

    நடிகர் டாம் க்ரூஸ் மிகவும் சிறப்பான நடிகராக ஹாலிவுட்டில் கொண்டாடப்படுகிறார். ஹாலிவுட்டில் மட்டுமில்லாமல் உலகளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அதிரடி அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

    டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபள்

    டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபள்

    இவரது மிஷன் இம்பாசிபள் படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 1986ல் இவரது நடிப்பில் வெளியான டாப் கன் படம் படத்தின் அடுத்த பாகம் தற்போது டாக் கன் மேவரிக் என்ற பெயரில் 36 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது.

    ஃபைட்டர் விமானி

    ஃபைட்டர் விமானி

    இந்தப் படத்தின் முதல் பாகம் இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் பைட்டர் விமானியாகவே நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்திலும் அவர் பைட்டர் விமானியாகவே நடித்துள்ளார். இந்தப் படம் அவரது இன்னொரு மிஷன் இம்பாசிபள் படமாகவே ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எப்-18 ஃபைட்டர் விமானங்கள்

    எப்-18 ஃபைட்டர் விமானங்கள்

    இந்தப் படத்தில் டாம் க்ரூஸ் எப் -18 ரக விமானங்களை ஓட்டி ஏராளமான சாகங்களை செய்துள்ளார். போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் மிகுந்த பாதுகாப்புடன் படக்குழு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானங்களை படக்குழு பயன்படுத்தி ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது.

    தாமதமான ரிலீஸ்

    தாமதமான ரிலீஸ்

    மேலும் நேரடியாக விமானத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கென உள்ளவர்களே அதை நிர்வகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 முதலே சூட்டிங் துவங்கி நடத்தப்பட்ட இந்தப்படத்தின் தாமதமான ரிலீசுக்கு கொரோனா முக்கிய காரணமாக அமைந்த நிலையில், இந்த விமானங்களும் அதன் பயன்பாடுகளும் கூட முக்கியமான காரணமாக காணப்படுகிறது.

    சிறப்பான சாகசங்கள்

    சிறப்பான சாகசங்கள்

    மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்களை கொண்டு டாம் க்ரூஸ் மிகவும் சிறப்பான பல சாகங்களை செய்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விமானங்களுக்காக ஒரு மணிநேரத்திற்கு இத்தனை லட்சங்கள் செலவழிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கொள்ள செய்துள்ளது.

    English summary
    Tom cruise Top gun movie uses Fighter jets that costs 11,374 dollars per hour
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X