என்னை அவமானப்படுத்திய அந்த பெரிய நடிகர்...யாரை சொல்கிறார் அனுமோகன்
சென்னை : வனிதா விஜயக்குமார் நடித்து வரும் புதிய படம் தில்லு இருந்தா போராடு. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல நகைச்சவை நடிகர் அனு மோகன் தனது திரையுலக பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
படையப்பா, பாட்டாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் அனுமோகன். அதிலும் படையப்பா படத்தில் ரஜினியிடம், பாம்பு புத்துக்குள்ள கைய விட்டிங்களே அது கடிக்காதா என அடிக்கடி கேட்கும் அனுமோகனின் டயலாக் மிக பிரபலம். இவர் தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தில்லாக துவங்கப்பட்ட படம்
இந்நிலையில் தில்லு இருந்தா போராடி ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர் பேசிய பல விஷயங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. படம் எடுக்குற பாம்பை பிடிப்பது சுலபம். ஆனால் தற்போதுள்ள கொரோனா சூழலில் படம் எடுக்கும் தயாரிப்பாளரை பிடிப்பது தான் மிக கஷ்டம். அப்படி தயாரிப்பாளரை கண்டுபிடித்து, தனது திறமையால் படம் எடுக்க வைத்துள்ளார் இந்த டைரக்டர். 2022 ல் தில்லாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.27 உடன் சென்னை வந்தேன்
தில்லு என்பது விளையாட்டல்ல. தில்லோடு தான் நான் கிளம்பி வந்தேன். நான் கிளம்பி வந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி தான் நம்பர் ஒன். இப்போது ரஜினி, கமல் போல். வெறும் 27 ரூபாயோடு, அன்ரிசர்வ்டு ரயிலில் கிளம்பி வந்தேன். அப்போது 17 ரூபாய் தான் டிக்கெட். மீதமுள்ள 10 ரூபாய் வைத்துக் கொண்டு, சென்னையில் ஒரு மாதம் தங்கி உள்ளேன். சினிமாவில் அவ்வளவு சுலபமாக யாரும் வந்து விட முடியாது.

உதவிய முதல் நபர்
கோவையில் இருந்து யாரையும் தெரியாமல் சென்னை வந்து, பாண்டி பஜார் வாசலில் இருக்க வாடகைக்கு ரூம் எடுத்துக் கொடுத்து, சினிமாவில் ட்ரை பண்ண சொல்லி என்னை ஊக்கப்படுத்தியவர் எனது நண்பர், உதவியாளர்கள் சாமிராஜ். வந்த காலத்தில் முதல் முறையாக சென்னையில் எனக்கு டீ, பிஸ்கெட் வாங்கி கொடுத்தவர் அவர் தான்.

யார் அவருன்னு கேட்க கூடாது
நான் சென்னையில் வந்த போது ஒரு பெரிய நடிகரை சந்தித்து கதை சொல்லலாம் என்று போனேன். அந்த நடிகர் யார் என்று நீங்கள் கேட்க கூடாது. அப்புறம் ஆயிரம் கேள்வி வந்து விடும். ஆனால் அவர் வீட்டு வாசலில் 12பி பஸ் போகும். பல நாட்கள் காத்திருந்த பிறகு மேனேஜர் உள்ளே என்னை அழைத்து பேசினார். இதற்கு முன் படத்தில் வேலை பார்த்திருக்கிறாயா என கேட்டார். இல்லை காப்பி ரைட் வேலைகள் செய்து வருவதாக கூறினேன்.
அவமானப்படுத்திய பெரிய நடிகர்
அதற்கு அவர், கோவையில் இருந்து பகலில் ரயில் விட்டால் அனைவரும் கிளம்பி வந்து விடுவீர்களா. தம்பி, முதலில் போய் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பாருங்கள். நான்கு படங்கள் டைரக்ட் செய்யுங்கள். அப்புறம் வந்து இந்த நடிகரை பாருங்க என்றார். அதை கேட்டதும் வருத்தப்பட்டேன். இருந்தாலும், அப்படி நான் வளர்ந்த பிறகு நான் இவரை தேடி வர வேண்டியதில்லை. இவர் தான் என்னை தேடி வருவார் என தில்லாக சொன்னேன் என்றார்.


Click it and Unblock the Notifications











