அந்த வாய்ப்பு இதுவரை கிடைக்கல.. தல அஜித்துடன் ஜோடி போடாத டாப் ஹீரோயின்கள்.. யார் யார்ன்னு பாருங்க!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தனது பிறந்தநாளை நடிகர் அஜித் கொண்டாட போவதில்லை என அறிவித்துள்ளார்.

Recommended Video

அஜித் Bangalowல் என்ன இருக்கு? | வெளியான உண்மைகள் | Ajith Kumar

ஆனாலும், தல அஜித்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

கோலிவுட்டில் டாப் ஹீரோயின்களாக வலம் வரும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஜோதிகா, அசின், சிம்ரன், தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன், என பல முன்னணி ஹீரோயின்களும் தல அஜித்துடன் ஜோடி போட்டு நடித்துள்ளனர்.

ஆனால், சில முன்னணி கதாநாயகிகளுக்கு தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

தளபதி விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடனும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால், இதுவரை தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கிடைக்கவில்லை. விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் கீர்த்தி சுரேஷ் தான் நடிப்பார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

சமந்தா

நடிகர் விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த நடிகை சமந்தாவும் இதுவரை தல அஜித்துடன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை சமந்தாவுடன் பிரபாஸ் நடிக்காததற்கு, அவரது உயரம் தான் காரணம் என சொன்ன நிலையில், அஜித்துடன் நடிக்கவும் அதே உயர பிரச்சனை காரணமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ஹன்சிகா

ஹன்சிகா

விஜய், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு என கோலிவுட்டின் அத்தனை டாப் ஹீரோக்களுடன் நடித்த நடிகை ஹன்சிகாவுக்கும் இன்னும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது. தற்போது மார்க்கெட் இழந்து தவிக்கும் ஹன்சிகா இதற்கு மேல், அஜித் படத்தில் நடிப்பாரா என்பது சந்தேகம் தான்.

எமி ஜாக்சன்

எமி ஜாக்சன்

ஷங்கரின் ஐ, 2.0 படத்தில் நடித்த நடிகை எமி ஜாக்சன், தெறி படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். விக்ரமுடன் தாண்டவம், ஐ படங்களில் நடித்துள்ளார். தனுஷுடன் தங்கமகன் படத்திலும் நடித்த சூப்பர் மாடல் அழகியான எமி ஜாக்சனுக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலியானா

இலியானா

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகை இலியானாவும் இதுவரை தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை பெறவில்லை. விவேகம் படத்தில் காஜல் அகர்வாலுக்கு முன்னதாக இலியானா தான் ஜோடி என்ற பேச்சுக்கள் அடிபட்டன. வலிமை படத்திலும் இலியானா தான் ஜோடி என கிசுகிசுக்கப்பட்டன. ஆனால், அந்த ஒல்லி பெல்லி நடிகைக்கும் நடிகர் அஜித்துடன் டூயட் பாட சான்ஸ் கிடைக்கவில்லை.

வலிமையில் யார்?

வலிமையில் யார்?

மே 1ம் தேதியான நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படம் குறித்த அப்டேட்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த தல ரசிகர்களுக்கு எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாது என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X