twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீதியை கிளப்பும் கொரோனா.. வைரஸ் குறித்து ஏற்கனவே எச்சரித்த இந்திய திரைப்படங்கள்!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் வைரஸ் தொற்று குறித்து பேசிய இந்திய திரைப்படங்கள் குறித்த ஓர் பார்வை..

    திரைப்படங்கள் பெரும்பாலும் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டும் கற்பனை கதைகளைக் கொண்டும் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் சில கற்பனை சம்பவங்கள் காலத்தின் ஓட்டத்தில் நிஜமாவதும் உண்டு.

    இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான கன்டஜியன் திரைப்படம் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இப்படம் கடந்த சில நாட்களாக உலகம் முழுக்க பெரும் பேசு பொருளாகி உள்ளது.

    மக்கள் ஆர்வம்

    மக்கள் ஆர்வம்

    இதனால் தொற்றுநோய் தொடர்பான திரைப்படங்களின் மீதான மக்களின் புதிய மோகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கூகுளில் 'சிறந்த வைரஸ் திரைப்படங்களை மக்களும் ஏற்கனவே தேட தொடங்கிவிட்டனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்திய படங்கள்

    இந்திய படங்கள்

    இந்நிலையில் சில இந்திய திரைப்படங்களும் வைரஸ்களின் கொடூர முகத்தை காட்டும் வகையில் காட்சியாக்கப்பட்டுள்ளன. அவற்றில் கமல்ஹாசனின் தசாவதாரம் முதல் சூரியாவின் ஏழாம் அறிவு படம் வரை, தொற்று நோய்க்கான வாய்ப்பை சமூகம் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை புரியவைத்தன.

    தசாவதாரம்

    தசாவதாரம்

    2008ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், நடிகர் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்திருப்பார். இப்படத்தின் மையக்கரு அமெரிக்க விஞ்ஞானி ஒருவரை சுற்றி அமைந்திருக்கும். பயோ வெப்பனான ஒரு வைரஸின் ஆபத்தை அறிந்த அவர் எப்படி வைரஸ் பரவலை தடுக்க முயற்சிக்கிறார், அந்த வைரஸ் நிரப்பப்பட்ட கன்டெயினர் எப்படி இந்தியாவை அடைகிறது, அதனால் ஏற்படும் பேரழிவை தடுக்க போராடும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

    எபோலா வைரஸ்

    எபோலா வைரஸ்

    அந்தப் படத்தின் ஒரு காட்சியில் கமல்ஹாசன், எபோலா வைரஸ் பற்றியும் குறிப்பிடுவார். எபோலா வைரஸ் கினியா மற்றும் லைபீரியா போன்ற நாடுகளில் பெரும் உயிர் இழப்பு மற்றும் சமூக பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியது. தசாவதாரம் திரைப்படம் ஆபத்தான வைரஸ்களால் ஏற்படும் ஆபத்து குறித்து பேசிய முதல் தமிழ் திரைப்படமாகும்.

    ஏழாம் அறிவு

    ஏழாம் அறிவு

    அடுத்தப்படியாக சூர்யா நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் ஆகும். இந்தப் படம் தற்போதைய சூழ்நிலையுடன் ஒத்து போவதால் கடந்த சில நாட்களாக இந்தப் படம் அதிகம் செய்திகளில் அடிபட்டு வருகிறது. உலகம் முழுவதும் மிகக்குறுகிய காலத்தில் பரவிய கொரோனா வைரஸைப் போலவே, இந்த படத்திலும் வைரஸ் சீனாவிலிருந்து உருவாகிறது. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மர் என்ற போராளி மற்றும் மருத்துவர், நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை குணப்படுத்துகிறார்.

    பயோ வார்

    பயோ வார்

    பின்னர், 20 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் இதேபோன்ற நிலைமை ஏற்படும்போது, ஒரு மரபணு பொறியியல் மாணவர் போதி தர்மரின் சந்ததியினரின் மரபணு நினைவை எழுப்ப முயற்சிப்பதாக படம் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் பண்டைய மற்றும் நீண்டகாலமாக மறந்துபோன திறன்களை அவர் பயன்படுத்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் படமும் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளான சீனா மற்றும் இந்தியா இடையே ஒரு பயோ வாரை நிறுத்தும் வகையிலேயே இருக்கும்.

    வாயை மூடி பேசவும்

    வாயை மூடி பேசவும்

    அடுத்து 2014ஆம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் என்ற படமும் ஒரு வைரஸ் காய்ச்சல் குறித்து பேசியிருக்கும். 'ஊமை காய்ச்சல் வைரஸ்' என்று பெயரிடப்பட்ட ஒரு மர்மமான நோய் ஒரு மலைப்பகுதியில் பரவி அப்பகுதி மக்களின் குரலை இழக்கச் செய்கிறது. இந்த வைரஸ் ஒரு கட்டத்தில் மரணத்தை கூட ஏற்படுத்துகிறது, கடுமையான இருமல் அதன் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கும்.

    மலையாளத்திலும்..

    மலையாளத்திலும்..

    கடத்தின் கரு சீரியஸாக இருந்தாலும் படத்தின் இயக்குநர் அதனை லைட்டாகவே செய்கிறார். உலகமே ஊமையாகி போனால் என்ன நடக்கிறது என்பதுதான் வாயாய் மூடி பேசவும் படம். பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மலையாளத்தில் சம்சாரம் ஆரோக்யாத்தினு ஹானிகாரம் என்ற தலைப்பில் வெளியானது.

    வைரஸ் படம்

    வைரஸ் படம்

    அடுத்து 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான வைரஸ் திரைப்படம் ஆகும். இந்த வைரஸ் படம் கேரளாவைத் தாக்கிய நிபா வைரஸ் தாக்குதல் குறித்த செய்தி அறிக்கைகளின் கற்பனையான ஆவணமாகும். வைரஸ் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தைரியமான ஒரு குழு எவ்வாறு தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறது என்பதை சொல்லும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

    எடுத்துக்காட்டு

    எடுத்துக்காட்டு

    வைரஸ் படம் ரசிகர்களிடம் இருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படம் இப்போது இன்னும் பிரபலமாக உள்ளது. தற்போதைய காட்சியை எவ்வாறு கையாள்வது என்பதற்கு இந்த படத்தின் பல நிகழ்வுகள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.

    Read more about: virus வைரஸ்
    English summary
    Top indian movies which spoke about Virus. People are interested to watch Virus movies at this Corona sitiuation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X