ஜியோ சாவனில் அதிகம் விரும்பி கேட்கப்பட்ட பாடல்… வெய்யோன் சில்லி பாடலுக்கு முதலிடம்!
சென்னை : பாடல்களை விரும்பி கேட்போர் மத்தியில் ஜியோ சாவன் ஆப் மிகவும் பிரபலமான ஒன்று.
ஜியோ சாவன் இந்த வருடத்தினுடைய டாப் 5 பாடல்கள், ஆல்பம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
தமிழில் டாப் 5 இடங்களை பிடித்த பாடல்களின் விவரம் இதோ

#5 - அந்த கண்ண பாத்தாக்கா
டாப் 5ல் ஐந்தாவது இடத்தை பிடித்தது அனிருத் இசையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள "அந்த கண்ண பாத்தாக்கா" பாடல். இந்த பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகள் எழுத யுவன் ஷங்கர் ராஜா பாடலை பாடியுள்ளார். ஜியோ சாவனில் 4.7 மில்லியன் முறை இந்த பாடல் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.

#4 - வாத்தி கம்மிங்
டாப் 5ல் நான்காவது இடத்தை பிடித்தது அனிருத் இசையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள "வாத்தி கம்மிங்" பாடல். இந்த பாடலை கானா பாலச்சந்தர் வரிகள் எழுதி பாடலையும் பாடி இருந்தார். ஜியோ சாவனில் 5.8 மில்லியன் முறை இந்த பாடல் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.

#3 - செல்லம்மா
டாப் 5ல் மூன்றாவது இடத்தை பிடித்தது அனிருத் இசையில் டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள "செல்லம்மா" பாடல். இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுத அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் பாடலை பாடி இருந்தனர். ஜியோ சாவனில் 5.8 மில்லியன் முறை இந்த பாடல் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.

#2 - குட்டி ஸ்டோரி
டாப் 5ல் இரண்டாவது இடத்தை பிடித்தது அனிருத் இசையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள "குட்டி ஸ்டோரி" பாடல். இந்த பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகள் எழுத தளபதி விஜய் பாடலை பாடி இருந்தார். ஜியோ சாவனில் 6.2 மில்லியன் முறை இந்த பாடல் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.

#1 - வெய்யோன் சில்லி
டாப் 5ல் முதல் இடத்தை பிடித்தது ஜீ.வி. பிரகாஷ் இசையில் சூரரை போற்று படத்தில் இடம்பெற்றுள்ள "வெய்யோன் சில்லி" பாடல். இந்த பாடலுக்கு விவேக் வரிகள் எழுத ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடலை பாடி இருந்தார். ஜியோ சாவனில் 6.6 மில்லியன் முறை இந்த பாடல் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











