நடிகைகள் சம்பளம் விர்ர்ர்.... அதிகம் வாங்குபவர் நயன்- அனுஷ்காதானாம்... நடிகர்களில்?

By Shankar

இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகை யார்? - ஒவ்வொரு ப்ளாக்பஸ்டர் படம் வெளியானதும் இப்படியான கேள்வி எழுவது வழக்கம்.

காரணம் ஒவ்வொரு பட வெற்றியும் அதன் நாயகன், நாயகியின் சம்பளத்தை மாற்றி அமைக்கின்றன.

தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் சிறப்பான வசூலைப் பெறுகின்றன. தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வசூலைக் குவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் ரூ.10 கோடியில் இருந்து ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

ரஜினி

ரஜினி

நாயகர்களைப் பொருத்தவரை இந்திய அளவில் இன்று வரை முதலிடத்தில் இருப்பவர் ரஜினிதான். எந்திரன் 2-ல் அவரது சம்பளம் ரூ 100 கோடிக்கும் மேல் என்கிறார்கள்.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

தமிழ், தெலுங்கு திரையுலகில் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் என்று பார்த்தால் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுதான். அவருக்கு ரூ 30 கோடி வரை சம்பளம் தரப்படுவதாகக் கூறப்படுகிறது.

அஜீத் - விஜய்

அஜீத் - விஜய்

தமிழில் மட்டுமே நடித்தாலும் ஆந்திராவிலும், கேரளாவிலும் இவர்களது படங்கள் நல்ல வசூலைப் பெறுகின்றன. அஜீத் 28 கோடியும், விஜய் 25 கோடியும் வாங்குவதாக வெளியில் சொல்கிறார்கள்.

நயன்தாரா - அனுஷ்கா

நயன்தாரா - அனுஷ்கா

கதாநாயகிகளைப் பொருத்தவரை நயன்தாராதான் நம்பர் ஒன். பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு அந்த நம்பர் ஒன் இடத்தை அனுஷ்காவும் பகிர்ந்து கொண்டுள்ளார். நயன்தாரா இப்போது ரூ 2.5 கோடி சம்பளம் பெறுகிறார். இதுவரை 2 கோடி வாங்கி வந்த அனுஷ்கா, பாகுபலிக்குப் பிறகு தனது சம்பளத்தை ரூ 2.5 ஆக உயர்த்திவிட்டார்.

தமன்னா

தமன்னா

இந்த இருவரையும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் தமன்னா. ரூ 1.75 கோடி வரை பெற்று வந்த அவர், பாகுபலிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திவிட்டார். தமிழில் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் வர ஆரம்பித்துள்ளன. கேட்கும் சம்பளத்தைத் தரவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதால் ரூ 2 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

ஸ்ரேயா - காஜல்

ஸ்ரேயா - காஜல்

இந்த இருவருக்கும் தமிழில் படங்கள் பெரிதாக இல்லை. ஆனாலும் சம்பளத்தை ரூ ஒரு கோடிக்கு கீழ் வாங்க முடியாது என அடம் பிடிக்கிறார்களாம். ஸ்ரேயா இந்தியில் நடித்த ‘திரிஷ்யம்' படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. காஜல் அகர்வால் பாயும் புலியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

த்ரிஷா

த்ரிஷா

எவர்கிரீன் த்ரிஷா ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வாங்குகிறார். கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடிக்கும் ‘தூங்காவனம்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அரண்மனை இரண்டாம் பாகம் படமும் தொடர்ந்து வெளிவர இருக்கிறது.

ஸ்ருதிஹாஸன்

ஸ்ருதிஹாஸன்

ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சமந்தா ஆகியோர் ரூ.75 லட்சம் வரை வாங்குவதாகக் கூறப்படுகிறது.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

இதுவரை ஒரு தோல்விப் படத்தில் கூட நடிக்காத லட்சுமி மேனன், ரூ 40 லட்சம் மட்டுமே வாங்குகிறாராம். அதே நேரம், அதிகப் படங்களில் நடிக்கவும் ஒப்புக் கொள்வதில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X