எட்டுத்திக்கும் பாராட்டைப் பெற்ற அந்தகன்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில், அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அந்தகன். இந்தப் படம் பிரசாந்த்தின் 50வது படம். இந்தப் படம் ஹிந்தியில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தாதுன் படத்தின் ரீமேக் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது என கூறப்பட்ட நிலையில் நேற்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தொடக்கத்தில் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஆகஸ்ட் 9ஆம் தேதியே படம் ரிலீஸ் என சொல்லப்பட்டு அந்தகன் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் வசூல் விபரம் குறித்து காணலாம்.

ஹிந்தியில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தப் படம் அந்தாதுன். அந்தப் படத்தின் தமிழ் ரிமேக் என்றவுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல், படத்தினைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை அனைவரும் படத்தினை பாராட்டினர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், படத்தில் சிம்ரனின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Andhagan Prasanth Box Office Collection

படத்தினை ரசிகர்களுடன் காண நடிகர் பிரசாந்த் மற்றும் படக்குழுவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்த்தனர். நடிகர் பிரசாந்த் மற்றும் அந்தகன் படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் அந்தகன் படத்தின் பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். மேலும் தியேட்டர் வாசலில் 1000 வாலா வெடி வைத்து கொண்டாடினர். அதேபோல் ட்ரம்ஸ் வாசித்து ஆட்டம் ஆடினர்.

Andhagan Prasanth Box Office Collection

பியானோ கலைஞர்: இந்த படத்தின் கதாநாயகன் ஒரு பியானோ கலைஞர் மற்றும் பார்வை மாற்றுத்திறனாளி. பிரசாந்த் சிறுவயதிலேயே பியானோ முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். இதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று படித்துள்ளார். இதனால் அந்தாதுன் படத்தின் கதையில் பிரசாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்ததால்தான் அந்தப் படத்தின் உரிமைகளை வாங்கியதாக, படம் ரிலீஸ்க்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தியாகராஜன் கூறியிருந்தார்.

Andhagan Prasanth Box Office Collection

வசூல்: படம் நேற்று ரிலீஸ் ஆனதால் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் அந்தகன் படம் இந்தியா முழுவதும் ரூபாய் 50 லட்சம் வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது. இது தொடர்பாக படக்குழு தரபபில் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு எதிர்பார்க்கின்றது.

Andhagan Prasanth Box Office Collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X