பிரசாந்த் “வேல்யூ” தெரியுமா?... யாரும் நினைத்துகூட பார்க்க முடியாத இடத்தில் பல கோடி மதிப்பு சொத்து!

சென்னை: 1990களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசாந்த்.

கோலிவுட்டின் டாப் ஸ்டாராக வலம் வந்த பிரசாந்த் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களாக ஃபீல்ட் அவுட் ஆகியுள்ள பிரசாந்த், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தற்போது நடிப்பில் பிஸியாக இல்லையென்றாலும் பிரசாந்தின் சொத்து மதிப்பும், அவரது வேல்யூவும் உச்ச நட்சத்திரங்களையே தலை சுற்ற வைத்துவிடும்.

சுற்ற வைத்துவிடும்.

 Top Star Prashanth: Do you know the net worth of actor Prashanth?

பிரசாந்த் பிறந்தநாள்

1990ம் ஆண்டில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசாந்த். முதல் படமே வெள்ளிவிழா கொண்டாடியதால் அடுத்தடுத்து செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், லத்தி, திருடா திருடா, ஆணழகன் போன்ற படங்களில் நடித்தார். பின்னர் ஹிட் கொடுக்க தடுமாறிக் கொண்டிருந்த பிரசாந்துக்கு 1998ம் ஆண்டு வெளியான ஜீன்ஸ் திரைப்படம் மாஸ் ஹிட் கொடுத்தது. மீண்டும் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் என கம்பேக் கொடுத்த பிரசாந்த், இப்போது அந்தகன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

பிரசாந்த் கோல்ட் டவர்:

2005ம் ஆண்டு கிரஹலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரசாந்த், 2009ல் அவரை விவாகரத்தும் செய்தார். தற்போது சிங்கிளாக வாழ்ந்து வரும் பிரசாந்த், நடிப்பில் பிஸியாக இல்லையென்றாலும் வேற லெவலில் செட்டில் ஆகியுள்ளார். பிரசாந்தின் தந்தை தியாகராஜனும் நடிகர், இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பிரசாந்த் டாப் ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கும் போதே சென்னையின் முக்கியமான பகுதியான தியாகராய நகரில் பல லட்சங்களை கொட்டிக் கொடுத்து இடம் வாங்கியிருந்தார். அதுதான் தற்போது பிரசாந்த் கோல்ட் டவர் என பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது.

 Top Star Prashanth: Do you know the net worth of actor Prashanth?

பல கோடி மதிப்பு:

பிரபல நகை கடையான ஜாய் ஆலுக்காஸின் ஷோரூம் இந்த டவரில் தான் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இதில் பிரசாந்தும் பார்ட்னர் என்பது பலருக்கும் தெரியாதது. 2008ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பிரசாந்த் கோல்ட் டவரில் மொத்தம் 17 மாடிகள் உள்ளன. உலகின் மிகப் பெரிய ஜாய் ஆலுக்காஸ் ஷோ ரூம் இங்குதான் திறக்கப்பட்டது. 8 மாடிகளில் மொத்தம் ஒரு லட்சம் சதுர அடியில் ஜாய் ஆலுக்காஸ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள இன்னும் ஒரு லட்சம் சதுர அடிகள் கொண்ட 9 மாடிகளில் சிலவற்றை வாடகைக்கு விட்டுள்ளனர்.

லைஃப் டைம் செட்டில்மெண்ட்:

அதுமட்டும் இல்லாமல் பிரசாந்தின் ஆபிஸும் இந்த கட்டத்தின் மேல் தளத்தில் தான் இயங்கி வருகிறது. தியாகராய நகரின் நார்த் உஸ்மான் ரோட்டின் லேண்ட் மார்க்கே இந்த பிரசாந்த் கோல்ட் டவர் தான் என்பது நேரில் பார்த்தவர்களுக்கு தெரியும். இன்றையதினத்தில் இந்த பிரசாந்த் கோல்ட் டவர் மட்டுமே பல நூறு கோடி மதிப்புடையது என சொல்லப்படுகிறது. சென்னை தி நகரில் ஒரு சின்ன கடையை வாடகைக்கு எடுக்க வேண்டுமானால், பல லட்சங்கள் தேவைப்படும். ஆனால், பிரசாந்த் சொந்தமாகவே ஒரு கோல்ட் டவர் வைத்திருப்பது கோலிவுட் டாப் ஹீரோக்களையே தலை சுற்ற வைத்துள்ளது.

 Top Star Prashanth: Do you know the net worth of actor Prashanth?

வாய்ப்பே இல்லை ராசா
சென்னையில் வேறு எந்த நடிகருக்கும் இத்தனை கோடி மதிப்பில் இப்படியொரு சொத்து இருக்குமா என்றால் அது சந்தேகமே. ஃபீல்ட்டில் இல்லாமல் இருந்தாலும், கால் மேல் கால் போட்டு பல தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிட சொத்து சேர்த்து வைத்துள்ளார் பிரசாந்த். பிரசாந்த் கோல்ட் டவர் மட்டும் இல்லாமல் இன்னும் பல இடங்களில் அவருக்கு சொத்துகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: top star prashanth kollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X