விஜய்யை தொடர்ந்து அந்த பிரபல நடிகரும் அரசியலுக்கு வரப் போகிறாரா?.. திருமாவுடன் திடீர் விசிட்!
சென்னை: திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக அதற்கு அடிபோடும் விதமாக நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யை தொடர்ந்து தூத்துக்குடிக்கு சென்ற பிரசாந்த்தும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் பிரசாந்த் தொடர்ந்து சமூக சேவைகளை செய்ய ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் சிலருக்கு ஹெல்மட் வழங்கி விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இந்நிலையில், அடுத்து அரசியல் பிரபலங்களையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார் டாப் ஸ்டார் பிரசாந்த்.
கோட் படத்தில் பிரசாந்த்: அப்பா தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில் நடித்து முடித்து விட்டு ரொம்ப நாளாக அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வந்த பிரபாஸ் வெங்கட் பிரபு விஜய் படத்தில் நடிக்க அழைத்ததுமே இந்த டீல் நல்லா இருக்கே என துணை நடிகராக நடிக்க வந்து விட்டார். கோட் படத்தில் விஜய் டீமில் பிரசாந்த் நடித்துள்ளது கோட் போஸ்டர் மூலம் ரசிகர்களுக்கு ரிவீல் ஆனது.
விஜய் அரசியலுக்கு வாழ்த்து: நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் பேசிய பிரசாந்த் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியிருந்தார். மேலும், விஜய்யுடன் அரசியல் பற்றி எல்லாம் பேசுவேன். ஆனால், நண்பருடன் பேசுவதை வெளியே சொன்னால் நல்லா இருக்காதே என்றார்.
எனக்கு தைரியமில்லை: அப்போது நீங்க அரசியலுக்கு வருவீங்களா என்கிற கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் அதற்கு எல்லாம் எனக்கு தைரியமில்லை என்றும் என்னால் முடிந்த சில சில சமூக சேவைகளை மட்டும் ரசிகர் மன்றத்தை வைத்து செய்து வருகிறேன் எனக் கூறினார்.
திருமாவளவனுடன் சந்திப்பு: இந்நிலையில், அப்பா தியாகராஜன் உடன் நடிகர் பிரசாந்த் திருமாவளவனை சந்தித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்புக்கு பின்னணியில் என்ன காரணம் இருக்கு என சமூக வலைதளத்தில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் போல பிரசாந்தும் விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











