Year Ender 2025 - இந்த வருடம் ஓவர் ஹைப் ஏற்றி புஸ்வானமான டாப் ஸ்டார் படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே ப்பா

சென்னை: இன்னும் சில நாட்களில் 2025ஆம் ஆண்டு முடிவடையப்போகிறது. இந்த வருடத்தில் ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும், முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் அதிக எதிர்பார்ப்பை பெற்றிருந்தன. ஆனால் ஒரு டாப் ஸ்டாருடைய படமும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. இதனால் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகினார்கள். இந்நிலையில் இந்த வருடம் அதிக ஹைப் ஏற்றி தோல்வியடைந்த சில படங்களை பார்க்கலாம்.

கோலிவுட்டுக்கு இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. பெரிய படங்கள், சின்ன படங்கள் என எக்கச்சக்கமாக திரைப்படங்கள் வெளியானாலும்; வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவுதான். முன்னணி ஹீரோக்கள் நடித்த ஒரு படம்கூட ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை; வணிக ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. சூழல் இப்படி இருக்க அந்த லிஸ்ட்டில் சிலவற்றை இதில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த்தின் கூலி: இந்த வருடத்தில் அதீத எதிர்பார்ப்பை பெற்ற படம் என்றால் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த கூலி திரைப்படம்தான். முதன்முறையாக இந்தக் கூட்டணி உருவானதன் காரணமாக ஓவர் ஹைப் எகிறியிருந்தது. நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருந்தது. ஆனால் அரத பழசான கதை, திரைக்கதை, மோசமான மேக்கிங், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் என படம் மொத்தமாக படுத்துவிட்டது. இந்தத் தோல்வி வலுவாக இருந்த லோகேஷின் கரியரையே அசைத்து பார்த்துவிட்டது.

Sun Pic Red Giant HR Mythri 2d

கமலின் தக் லைஃப்: கமலுக்கும் இந்த வருடம் போதாத வருடம்தான். ஷங்கருடன் சேர்ந்து கடந்த வருடத்தில் இந்தியன் 2 படத்தை தோல்வி படமாக கொடுத்திருந்தார். எனவே மணிரத்னத்துடன் இணைந்து சூப்பர் ஹிட்டை கொடுத்துவிடலாம் என்று கணக்கு போட்டு தக் லைஃப் படத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படமும் படுதோல்வி. அதிலும், படத்தின் மைய கதை ஒரு பெண்ணுக்காக தந்தையும் மகனும் அடித்துக்கொள்வது போல் இருந்ததால்; இப்படத்தை ட்ரோல் செய்து அடித்து துவைத்துவிட்டார்கள் ரசிகர்கள்.

அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி: வேறு எந்த பெரிய நடிகரும் இந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அஜித் நடித்தார். மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே ஏற்றிய ஹைப்புக்கு ஏற்ப இல்லை. விடாமுயற்சியை ஏகே ரசிகர்களே விரும்பவில்ல. குட் பேட் அக்லி முந்தைய அஜித் படங்களின் ரீல்ஸ் தொகுப்பாக இருந்தது. அது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும்; படம் பார்த்த பொதுவான ரசிகர்களுக்கு திண்டாட்டம்தான். அதேசமயம் வசூலில் 100 கோடி ரூபாய் அள்ளியதாக தயாரிப்பு தரப்பு சொன்னது மட்டும்தான் ஆறுதல்.

விக்ரமின் வீர தீர சூரன்: சியான் விக்ரம் சோலோவாக ஒரு ஹிட் படம் கொடுத்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன என்பது அவருக்கே தெரியாது. கடந்த வருடம் தங்கலான் படத்தில் அடி வாங்கிய அவர்; இந்த வருடம் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்தார். இதற்கு முன்னதாக அருண் இயக்கியிருந்த சித்தா பெரிய ஹிட்டடித்திருந்ததால் இப்படத்தின் மீதும் ஓவர் ஆவல் இருந்தது. கமர்ஷியலாக படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் படத்தில் மிஸ் ஆனதால் படம் தோல்வியை சந்தித்தது.

சூர்யாவின் ரெட்ரோ: விக்ரமின் நிலைமைதான் சூர்யாவுக்கும். கடந்த வருடம்தான் சிவா இயக்கத்தில் நடித்த கங்குவா மொரட்டு அடி வாங்கியது. அந்த காயத்துக்கு கார்த்திக் சுப்புராஜை வைத்து மருந்திட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து ரெட்ரோ படத்தில் நடித்தார். ஆனால் படத்தின் கதையும், திரைக்கதையும் எங்கெங்கோ பயணித்து செல்ல; இந்தப் படம் ஒர்க் அவுட் ஆகாது என்று ரசிகர்களும் கடுமையான விமர்சனத்தை வைத்து ஏமாற்றத்தோடு தியேட்டரிலிருந்து வந்துவிட்டனர். இப்படி டாப் நடிகர்களின் எந்த படமும் பெரிதாக இந்த வருடம் ஓடவில்லை. அடுத்த வருடமாவது கோலிவுட்டில் வெற்றி மழை தூவுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X