2021இல் கலக்கிய டாப் பாடல்கள்...மக்கள் ரிப்பீட் மோடில் கேட்கும் ஹிட் சாங்ஸ்
சென்னை :படத்தில் வரும் பாடல்கள் மட்டும் இல்லாமல் ஆல்பம் பாடல் வரை இந்த வருடத்தை இனிமையாக்கிய டாப் பாடல்களின் லிஸ்டை இந்த பதிவில் பாப்போம்.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டாக்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் வரும் "செல்லம்மா செல்லம்மா" பாடல் இந்த வருடம் இணையத்தில் வைரலாக பரவியது. லிரிகல் வீடியோவாக வெளிவந்த முதல் நாளில் இருந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் காம்போ இந்த படத்தில் வேற லெவலலில் பேசப்பட்டது.

குழந்தைகள் பெரியவர்கள் ரசிக்கும்
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் சஞ்சனா நடராஜன் நடித்த திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.இப்படத்தில் வரும் "டாலு புஜ்ஜி" பாடல் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. அதற்கு காரணம் தனுஷின் சூப்பரான நடனம் மற்றும் இசையும் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் இந்த பாடல் இந்த வருடத்தின் ஹிட் பாடல்களில் ஒன்றாக உள்ளது. இதே படத்தில் "ரகிட்ட ரகிட்ட" பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது மேலும் அதில் சஞ்சனா நடராஜன் போடும் நடனம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி ரீல்ஸ் வீடியோவாகவும் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட் லிஸ்டில் ஒன்றாக
இதை தொடர்ந்து, விஜய் மாளவிகா மோகனன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் வரும் "வாத்தி கம்மிங்" பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் படம் என்றாலே அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த பாடலும் படமும் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்தது மட்டுமல்லாமல் இந்த வருடத்திற்கான ஹிட் லிஸ்டில் ஒன்றாகவும் நிலைநிறுத்திக் கொண்டது..

எங்கும் பரவி
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்த சூரரைப்போற்று திரைப்படம் இந்த வருடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "காட்டு பயலே"பட்டித்தொட்டி எங்கும் பரவி மெகா ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூர்யாவின் 2d புரொடக்ஷன் தயாரித்ததும் குறிப்பிடதக்கது இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.இதே படத்தில் ரக்கர ரக்கர பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது மேலும் அதில் சஞ்சன நடராஜன் போடும் நடனம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிக் ரீல்ஸ் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

இணையத்தில் வைரல்
அடுத்து நம் லிஸ்டில் இருக்கும் பாடல் தான் என்ஜாய் என்ஜாமி, பாடகி தி மற்றும் அறிவு பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதற்கு காரணம் சாதாரண பாடல் மாதிரி இல்லாமல் இதில் சொல்லப்பட்ட கருத்து மற்றும் விஷ்வல் வேற லெவல் ஹிட்டானது. தீயின் குரல் அனைவரையும் கவர்ந்து இந்த பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் படம் பார்க்கவில்லை என்றாலும் பாடல்களை வைத்து ஹிட் கொடுக்கும் படங்களும் உண்டு. அந்த வகையில் இந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .


Click it and Unblock the Notifications











