ராணா டக்குபதி முதல் காஜல் வரை.. 2020ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்த டாப் 10 சினிமா பிரபலங்கள்!

சென்னை: 2020 ஆம் ஆண்டில் ராணா டக்குபதி முதல் காஜல் வரை பல சினிமா பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

Recommended Video

Top 10 2020 celebrity wedding | Rana to Kajal - Filmibeat Tamil

2020 ஆம் ஆண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா தொழில் முற்றிலும் முடங்கியிருந்தது. இருந்த போதும் பல பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்.

பல பிரபலங்களின் திருமணம் கொரோனா காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. பல முக்கிய பிரபலங்களின் திருமணங்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் நடந்தது. அவற்றில் டாப் 10 திருமணங்களை காணலாம்..

மகத் - பிராச்சி

மகத் - பிராச்சி

நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான மகத், கடந்த பிப்ரவரி மாதம் தனது காதலியான பிராச்சியை திருமணம் செய்து கொண்டார். பிராச்சி முன்னாள் மிஸ் இந்தியா ஆவார். அவர்களின் திருமணத்தில் நடிகர் சிம்பு உட்பட திரைத்துறை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

யோகிபாபு - பார்கவி

யோகிபாபு - பார்கவி

நடிகர் யோகி பாபுவும் இந்த ஆண்டு திருமணம் செய்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்தார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தனது, ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்கே சுரேஷ் - மது

ஆர்கே சுரேஷ் - மது

நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் நடைபெற்றது. தங்களின் திருமணத்தை சில நாட்களுக்கு பிறகு நடிகர் ஆர் கே சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஏற்கனவே சின்னத்திரை நடிகை ஒருவருடன் நிச்சயம் சென்று ஆர்கே சுரேஷின் திருமணம் நின்றது குறிப்பிடத்தக்கது.

ராணா - மிஹீகா

ராணா - மிஹீகா

பிரபல நடிகரான ராணா டகுபதி, தனது காதலியான மிஹீகாவை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டிடுயோவில் கொரோனா காரணமாக எளிமையாக நடந்தது. இதில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், நாகசைதன்யா, வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், நடிகை சமந்தா உள்பட 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

காஜல் அகர்வால் - கவுதம் கிட்சுலு

காஜல் அகர்வால் - கவுதம் கிட்சுலு

அடுத்து நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தொழிலதிபரான கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்தார். தற்போது மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது போட்டோக்கள் பெரும் வைரலாகி இணையத்தை தெறிக்கவிட்டது.

வனிதா - பீட்டர் பால்

வனிதா - பீட்டர் பால்

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை வனிதாவும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்களின் பட்டியலில் இணைந்தார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தனா வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார். ஆனால் 3 மாதத்திலேயே அவர்களின் திருமணம் முடிவுக்கு வந்தது.

அஷ்வின் ராஜா - வித்யாஸ்ரீ

அஷ்வின் ராஜா - வித்யாஸ்ரீ

கும்கி, பாஸ் (எ) பாஸ்கரன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் அஸ்வின் ராஜா. இவர் கடந்த ஜூன் மாதம் தனது காதலியான வித்யாஸ்ரீயை திருமணம்செய்து கொண்டார். கொரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த நேரத்தில் காமெடி நடிகர் அஸ்வின் ராஜாவின் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

மியா ஜார்ஜ் - அஷ்வின் ஃபிலிப்

மியா ஜார்ஜ் - அஷ்வின் ஃபிலிப்

2010-ம் ஆண்டு மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் மியா ஜார்ஜ். அதற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு 'அமர காவியம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து நேற்று இன்று நாளை, ஒரு நாள் கூத்து, வெற்றி வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அஷ்வின் ஃபிலிப் என்ற தொழில் அதிபரை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்தார்.

ஆரவ் - ராஹி

ஆரவ் - ராஹி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். 2017-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தனது காதலியான ராஹியை திருமணம் செய்து கொண்டார் ஆரவ். ராஹி கவுதம்மேனனின் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

நிஹாரிகா- சைத்தன்யா

நிஹாரிகா- சைத்தன்யா

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நிஹாரிகா. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திராவின் மகளான நிஹாரிகா தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் சைத்தன்யாவுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X