மோடியைச் சந்தித்த பிரஷாந்த்தின் பேன்ட் டிசைன் பார்த்தீங்களா... டிரெண்ட் ஆகுது பாஸ்!

By Vignesh Selvaraj

சென்னை : தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் நடிகர் பிரசாந்த்தும் இன்று கை குலுக்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

'தினத்தந்தி' நாளிதழின் பவள விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அதற்கு முன்பாக, முதல் வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் அருகில் சென்று அவருடன் கைலுக்கி நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. அப்போது இரண்டாவது வரிசையில் இருந்த பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்கள் முன் வரிசைக்கு வந்தனர்.

பிரசாந்த் - மோடி

நடிகர் பிரசாந்த் மோடிக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பிறகு இருவரும் கைலுக்கி ஒருவொருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் பிரசாந்த் வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்.

 பிரசாந்த் பேன்ட் மாடல்

பிரசாந்த் பேன்ட் மாடல்

பிரசாந்த் அணிந்திருந்த பேன்ட் மாடல் சில வருடங்களுக்கு முன்பு தமிழக இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாக இருந்தது. டார்க் நிற பேன்ன்டில் checked வகை கட்டங்கள் இடம்பெறும் இந்த பேன்ட் plaid model என அழைக்கப்படுகிறது. ஒயிட் உள்ளிட்ட சாஃப்ட் நிற சட்டைகளுக்கு மிகவும் பொருத்தமாக இந்தவகை பேன்ட்கள் இருக்கும்.

 பேன்ட் மாடல்

பேன்ட் மாடல்

70, 80-களில் பிரபலமாக இருந்து வழக்கொழிந்து plaid model பேன்ட் சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் ட்ரெண்ட் ஆனது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இந்த வகை பேன்ட்கள் தற்போது பரவலாக புழக்கத்தில் இல்லை எனினும் ரேமண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பர மாடல்கள் இப்போதும் இதைத்தான் அணிந்திருக்கிறார்கள்.

 ஜானி பிரசாந்த்

ஜானி பிரசாந்த்

'ஜானி' படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரசாந்த் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார். இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சஞ்சிதா ஷெட்டி பிரசாந்த் ஜோடியாக நடிக்கிறார். பட வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜானி ஸ்டைலா

ஜானி ஸ்டைலா

ஒருவேளை 1980-ல் வெளியான ரஜினியின் 'ஜானி' காலத்துக்கே போய்விட்டாரா என்னவோ..? ஆனால், அந்தப் படத்தில் கூட இந்த மாடல் பேன்ட்களை அணிந்திருக்க மாட்டார் ரஜினி. இந்த பேன்ட் ஜானி படத்துக்காகத் தயாரானதா இல்லையா என்பது படம் வெளியாகும்போதுதான் தெரியவரும். 'ஜானி' படத்தின் புகைப்படங்களில் இருப்பது போல அல்லாமல் தாடி ஸ்டைல் மாற்றி வேறொரு கெட்டப்பில் இருக்கிறார் பிரசாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X