கிழிந்து தொங்கிய கட்சிக் கொடி.. சர்ச்சையை கிளப்பிய தலைவா போஸ்டர்.. உடனடியாக நீக்கம்!

சென்னை: தளபதி விஜய்யின் தலைவா படம் வெளியாகி 7 வருடங்களை கடந்துள்ள கொண்டாட்டத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தலைவா படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அந்த படத்தின் போஸ்டரில் கட்சிக் கொடி ஒன்று கிழிந்து தொங்குவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது, பின்னர் உடனடியாக தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

தலைவா

தலைவா

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில், தளபதி விஜய், அமலா பால், சத்யராஜ் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான படம் தலைவா. ஏகப்பட்ட அரசியல் வசனங்களுடன் வெளியான அந்த படத்தின் ரிலீஸ் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால், நடிகர் விஜய்யின் முயற்சியால் அந்த படம் ரிலீசானது.

7 ஆண்டுகள்

7 ஆண்டுகள்

தலைவா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், தளபதி ரசிகர்களுக்கு என்றுமே அந்த படம் ஃபேவரைட்டான படம் தான். அந்த படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை இயக்குநர் ஏ.எல். விஜய் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதிமுக vs விஜய்

அதிமுக vs விஜய்

2013ம் ஆண்டு தலைவா படத்தின் டைட்டில் பிரச்சனை காரணமாக அந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் அதிமுக அரசு செயல்பட்டதாக, விஜய் ரசிகர்கள் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைவா படத்தை வெளியிட விடாமல் தடுத்ததாகவும், சர்ச்சைகள் கிளம்பின. இசை வெளியீட்டு விழாவிலும் இது குறித்து விஜய் பேசியுள்ளார்.

கிழிந்து தொங்கும் கொடி

கிழிந்து தொங்கும் கொடி

இந்நிலையில், தற்போது வெளியாகி டிரெண்டாகி வரும் அந்த போஸ்டரில், ஒரு ஓரத்தில் இருக்கும் மாடியில் ஒரு கட்சியின் கொடி கிழிந்து தொங்குவதை போல வடிவமைத்துள்ளனர். அது அதிமுகவின் கொடி என்றும், மறக்கவும் மாட்டோம்.. மன்னிக்கவும் மாட்டோம் என தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

தளபதி விஜய்யின் தலைவா படம் உரிய நேரத்தில் ரிலீஸ் ஆகி இருந்தால், தேவையில்லாமல், ரசிகர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்திருக்க மாட்டார் என்றும், அதிமுகவின் ஆட்சிக்கு எதிரான ட்வீட்களையும், மீம்களையும் போட்டு தங்களின் கோபத்தை விஜய் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சர்ச்சையை கிளப்பும் போஸ்டரை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்சிக்கொடி நீக்கம்

கட்சிக்கொடி நீக்கம்

அதிமுக கட்சிக் கொடி கிழிந்து தொங்கும் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், உடனடியாக அந்த கொடியை தலைவா போஸ்டரில் இருந்து நீக்கியுள்ளனர். இதுகுறித்து அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் கடும் வாக்குவாதம் எழுந்து வருகிறது. அதிமுகவினரும் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X