தமிழ் திரைப்படங்களுக்கான ஓர் அங்கீகாரம்.. டொரண்டோ தமிழ் திரைப்பட விழா 2020!

கனடா: தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 - 13, 2020) மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன.

உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன.

Toronto Tamil International Film Festival 2020

இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு நடத்தப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

கனடிய அரசு கனடாவில் வாழும் தமிழர்களை அனைத்து வழிகளிலும் அவர்களது கலை, கலாச்சார நிகழ்வுகளை அங்கீகரித்து, அதற்கான அனைத்து ஒத்துழைப்பை வழங்குவதோடு அரசு தலைவர்கள் வரை தமது பங்களிப்பினை சிறப்பாக செய்துவருகின்றார்கள்.

Toronto Tamil International Film Festival 2020

எனவே, கனடாவில் நடைபெறும் இந்த திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமையும் என்பது உண்மை.

[அத்துடன் உலகில் நடக்கும் மிகவும் பெரிய திரைப்பட விழா என அறியப்பட்ட Toronto International (TIFF) திரைப்பட விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெறவுள்ளதால், வரும் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், இந்த இரண்டு விழாக்களிலும் பங்குபற்றக்கூடிய வாய்ப்பாக இந்த தேதிகள் அமைகின்றன.]

Toronto Tamil International Film Festival 2020

பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை எப்போதும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை.

நிச்சயமாக தமிழ் திரைப்பட விழா இக்குறையை நிவர்த்தி செய்யும்.

தமிழ் திரைப்படங்களையும், அதன் பின்னால் உள்ள கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி, பாராட்டி, மகிழ்ந்து கொண்டாட தமிழ் திரைப்பட விழா வரும் செப்டம்பர் 2020 வில் நடைபெறவுள்ளது.

Toronto Tamil International Film Festival 2020

உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான திரை அடையாளமாக, திரைக்களமாக, பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், குறும் படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழே போட்டியிட்டு தகுதியுடையவர்கள் "விருதினையும், பரிசுகளையும், அங்கீகாரங்களையும்" பெற்றுக்கொள்வார்கள்.

உலகம் முழுவதும் வாழ்கின்ற திரை மற்றும் கலைஞர்களுக்கான மிகப் பெரிய திரையிடல், பயிற்சி, பட தயாரிப்பு உதவி களமாக தமிழ் திரைப்பட விழா அமையும்.

பல்வேறு பிரிவுகளில் திரையிடல் மற்றும் போட்டிக்குத் தேர்வாகும் திரைப்படப் போட்டிகளுக்கான விண்ணப்ப அழைப்பிதழ் :

January 05. 2020 தொடங்கி விண்ணப்ப முடிவுத் தேதி : May 31, 2020 நிறைவுபெறும்.

தமிழ் திரைப்பட விழாவின்(2020) போட்டிகளுக்கான பிரிவுகள் :

முழுநீளப் படங்கள்

குறும்படங்கள்

காணொளிகள்

ஆவணப்படங்கள்

இசை ஆல்பங்கள்

அனிமேஷன் படங்கள்

Feature Film

Long Short (All Genres)

Short (All Genres)

International Short Films

Documentary

Photography

Web Series

Animation

Music Video/Album

Advertisement

Social Media Tiny Film

உங்கள் படைப்புகளை சீக்கிரமாக கீழே உள்ள லிங்க்கில் அனுப்பி வையுங்கள்!

https://filmfreeway.com/ttiff/

தமிழ் திரைப்பட விழா இணையத்தளம்

http://www.ttff.ca

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X