பிக்பாஸ் எவிக்ஷனில் இருந்து ஜாக்பாட் அடித்ததை போல் தப்பித்த 5 பேர்.. ஒரே ஜாலிதான் போங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் எவிக்ஷனில் இருந்து ஒரே அடியாக 5 பேர் தப்பித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்தனர்.

தீயில் போட்டு கொளுத்தி

தீயில் போட்டு கொளுத்தி

கடந்த வாரம் நாமினேஷன் புராசஸ் படு பயங்கரமாக நடைபெற்றது. நாமினேட் செய்த போட்டியாளர்களின் போட்டோக்களை தீயில் போட்டு கொளுத்தினர் சக ஹவுஸ்மேட்ஸ்.

11 பேர் நாமினேஷன்

11 பேர் நாமினேஷன்

இதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர். சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் நாமினேஷனில் நிறுத்தினர்.

சனம் காப்பாற்றப்பட்டார்

சனம் காப்பாற்றப்பட்டார்

இவர்களில் ஒருவர் நாளை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாய் அவர் காப்பாற்றப்பட்டார்.

மொத்தமாக 6 பேர் சேவ்டு

மொத்தமாக 6 பேர் சேவ்டு

இதேபோல் பாலாஜி முருகதாஸ், ரியோ, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத் ஆகிய 5 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். 11 பேரில் 6 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வேல்முருகன்?

வேல்முருகன்?

காப்பாற்றப்பட்ட 5 பேரை அறிவித்த கமல் எஞ்சிய 5 பேரான, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் சேகர், வேல்முருகன், ஆஜித், நிஷா ஆகிய 5 பேரில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேற்றப்படுவார் என்றார். ஆனால் ஏற்கனவே வேல் முருகன்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிட்டதக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X