கமலின் அறிவு கண்டு உறைந்து விட்டேன்: ஆங் லீ புகழாரம்

By Mayura Akilan

சென்னை: நடிகர் கமல்ஹாசன் உண்மையிலே உலக நாயகன்தான், அவருடைய சினிமா அறிவு என்னை வியக்க வைக்கிறது என்று ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ஆங் லீ கூறியுள்ளார்.

ஆங் லீ புதிதாக இயக்கியுள்ள படம் 'லைஃப் ஆஃப் பை' இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகை தபு இந்த ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Kamal Hassan and Ang Lee

இந்த படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் ஆங் லீ இந்தியாவின் முக்கிய நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சென்னை வந்த அவர், 'லைஃப் ஆஃப் பை' படத்தின் 3D டிரெய்லரைப் தமிழ்த் திரையுலகினருக்கு போட்டுக்காட்டினர். இதனை பலரும் பாராட்டினர். நிகழ்ச்சியின் போது இயக்குனர் ஆங் லீ-யை பேட்டி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரை நடிகர் கமல்ஹாசன் பேட்டி எடுத்தார்.

பேட்டியின்போது கமல் கேட்ட கேள்விகளும், ஆங் லீயைப் பற்றி அவர் தெரிந்து வைத்திருந்ததும், உலக சினிமா குறித்த கமல்ஹாசனின் புலமையும் ஆங் லீயை அசத்திவிட்டதாம்.

இது குறித்துப் பின்னர் பேசிய ஆங் லீ, கமல் சிறந்த அறிவாளி. என்னைப் பற்றியும் என் படங்களைப் பற்றியும் அவர் இந்த அளவுக்கு அறிந்து வைத்திருப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

கமல், என்னை பேட்டி எடுத்த விதத்தில் நான் அப்படியே உறைந்துவிட்டேன். கமல், உலக சினிமா அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட. இந்திய திரை உலகமே அவரால் பெருமையடைகிறது என்று பாராட்டு பத்திரம் வாசித்தார் ஆங் லீ.

அதன் பின்னர் கமல் இயக்கிய 'விஸ்வரூபம்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டு கமலின் அலுவலகத்திற்குச் சென்று விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரைப் பார்த்தார். "மொழி தெரியாதவர்களுக்குக் கூட புரியும் வகையில் இருக்கிறது விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர். நிச்சயமாக விஸ்வரூபம் மிகப் பெரிய அளவில் வெற்றியடையும்" என ஆங் லீ வாழ்த்தினார்.

கமல்ஹாசனை வாழ்த்தும் இரண்டாவது ஹாலிவுட் வாய் ஆங் லீ. ஏற்கனவே பேரி ஆஸ்போர்ன் கமல்ஹாசனைப் பாராட்டியதோடு தனது படத்தையும் இயக்கி, நடிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X