Tourist Family Box Office: ரெட்ரோ புயலில் சிக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி.. 2வது நாளில் குறைந்த வசூல்!

சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், யோகி பாபு, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் படத்திற்கான வசூல் பெரிதாக வரவில்லை என்பது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் சூர்யாவின் ரெட்ரோ எனும் பெரிய படத்துடன் இந்த ஃபீல் குட் மூவி மோதியது தான் என்கின்றனர். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் சூர்யாவின் ரெட்ரோ படத்தை பார்க்கவே இந்த வாரம் முன்னுரிமை கொடுத்து பார்த்து வருகின்றனர்.

Tourist Family Box Office Sasikumar movie saw a slight dip at Day 2 Collections

அதன் காரணமாக முதல் நாளை விட 2வது நாளில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் சற்றே குறைந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ரைஸ் ஆகும் ரெட்ரோ: பல வருடங்களாக பாக்ஸ் ஆபீஸில் சூர்யா படங்கள் சொதப்பி வந்த நிலையில், அந்த நிலையை கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ மாற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், விது, சிங்கம்புலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் உலகளவில் 46 கோடி வரை வசூல் செய்ததாக நேற்று இரவு 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரெட்ரோ படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால் இன்றுடன் போட்ட காசை படம் எடுத்துவிடும் என்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வசூல் எல்லாம் படத்துக்கு லாபக் கணக்கில் சேரும் என்றும் 150 கோடிக்கும் அதிகமான வசூலை ரெட்ரோ கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். வரும் வாரமும் எந்தவொரு பெரிய படமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு மழையில் டூரிஸ்ட் ஃபேமிலி: இலங்கைத் தமிழர்களான சசிகுமார் மற்றும் சிம்ரன் ஃபேமிலி கள்ளத்தனமாக தமிழ்நாட்டுக்கு வந்து அகதிகளாக வாழ அவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் மற்றும் மனிதம் எப்படி அவர்களை காப்பாற்றுகிறது என்கிற கதையை இளம் இயக்குநர் அழகாக செதுக்கிய நிலையில், படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால், மக்கள் கூட்டம் பெரிதளவில் இன்னமும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை திரையரங்குகளுக்குச் சென்று பார்க்கவில்லை என்பது அதன் வசூல் நிலவரத்தை பார்த்தாலே தெரிகிறது என்கின்றனர்.

டூரிஸ்ட் ஃபேமிலி 2 நாள் வசூல்: முதல் நாளில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்த நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று சற்றே வசூல் குறைந்து 1.65 கோடி மட்டுமே வசூல் ஈட்டியுள்ளதாக sacknilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் சற்றே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 3.65 கோடி வசூலை இந்த படம் ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தியேட்டர்கள் அதிகரிக்குமா?: டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு குறைவான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைத்த நிலையில், படத்துக்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மேலும், திரையரங்குகள் அதிகரிக்குமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. சசிகுமார் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் என அவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால், மலையாள படங்கள் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வசூல் செய்வது போல இது போன்ற படங்கள் செய்தால் தான் நல்ல சினிமாக்கள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X