Deleted Scene: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி.. அடடே தரமான காட்சியா இருக்கே
சென்னை: சசிகுமார், சிம்ரன், பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மே 1ஆம் தேதி வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே, அந்த படம் குடும்பத்துடன் பார்க்க ஏதுவான படமாக அமையும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார். அதேபோல் மில்லியன் டாலர் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றாலே, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபீல் குட் படங்களை தயாரித்து வருகிறது என்ற உத்திரவாதத்தை மக்களுக்கு கொடுத்துள்ளது. அவர்கள் காம்பினேஷனில் ஒரு படம் வெளியாகிறது என்றதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியது.

படத்தின் புரோமஷனில் இருந்து டீசர், டிரைலர் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது. முதல் நாளில் படத்தின் கலெக்ஷன் மிகவும் குறைவு. அதற்கு காரணம் சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆனது தான். ஆனால் மே 2 ஆம் தேதியில் இருந்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் மற்றும் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்தது. இதனால் படத்தின் வசூல் எகிறியது.
சம்பளம்: கடந்த வாரத்தில் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் நாயகன் சசிகுமார். இந்த படத்தின் வெற்றி புதுமுக இயக்குநர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. தோல்வி அடைந்த இயக்குநர்களுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இதனால் நான் எனது சம்பளத்தை உயர்த்த மாட்டேன். நான் அப்படி சம்பளத்தை உயர்த்தினால், படத்தின் பட்ஜெட் அதிகரிக்கும். இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்படும். எனவே நான் சம்பளத்தை உயர்த்த மாட்டேன். அதே சம்பளம் தான் என்று கூறினார்.

டெலிடேட் சீன்: படத்தின் இரண்டாம் பாதியில் சிம்ரனுக்கு ரெஃபரன்ஸ் பாடலாக ஆல்தோட்ட பூபதி பாடலில் இருந்து மியூசிக் இடம் பெற்றது. சிம்ரனும் அந்த பாடலில் அவர் ஆடியது போல் ஆடினார். இப்படி இருக்கும்போது படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது சிம்ரனுக்கு ஆல்தோட்ட பூபதி பாடல் இடம் பெற்றதைப் போல, சசிகுமாருக்கு சுந்தரபாண்டியன் பட பாடல் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் கருதி அதனை படத்தில் இருந்து நீக்கி உள்ளார்கள். ஆனால் இப்போது படக்குழு அதனை வெளியிட்டுள்ளது. படக்குழு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், இதுவும் நல்லாத்தானே இருக்கு, இதை ஏன் டெலிட் செய்தீர்கள்? ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்யும் போது இந்த காட்சியை இணைத்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











