யாருக்குத்தான் பிடிக்காது.. ஆட்டோ டிரைவருக்கு காத்திருந்த ஷாக்.. டூரிஸ்ட் பேமிலி இயக்குநரின் போஸ்ட்!

சென்னை: கடந்த மாதம் அதாவது மே மாதம் வெளியான படங்களில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிக்கிறார்கள் என்ற போது படத்தின் மீது பலருக்கும் ஆர்வம் அதிகரித்தது. படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு வந்ததும் படம் கன்ஃபார்ம் ஹிட் என அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள். அதேபோல் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், பக்ஸ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் படம் வெளியானது. படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது. ஓடிடியில் வெளியான பின்னர் படம் மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவித்து வருகிறது.

இந்த படம் கட்டாயம் பல விருதுகளுக்கு தகுதியான படம் என்பதால் இந்த படத்தின் மீது பலருக்கும் கவனம் உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, அபிஷன் ஜீவிந்த் இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டு இருந்துள்ளார். அந்த பயணத்தின் போது அபிஷன் ஜீவிந்த் தனது முகத்தை மாஸ்க் போட்டு மூடியுள்ளார். இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு இவரை யார் என்று அடையாளம் தெரியவில்லை. இதுமட்டுமில்லாமல், இவர் பயணம் செய்த நேரத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இருந்து முகை மழை பாடலை ஒலிக்கச் செய்துள்ளார் அந்த ஆட்டோ ஓட்டுநர். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை விளக்கமாக எழுதியுள்ளார்.

Tourist Family Director Abishan Jeevinth Gives Surprise To Auto Driver Instagram Post
Photo Credit:

அபிஷன் ஜீவிந்த்: அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " நான் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த ஆட்டோ டிரைவர் அண்ணா திடீரென்று யூடியூப்பில் "முகை மழை" பாடலை ஒலி பரப்பினார். என் முகம் உடனடியாக பிரகாசித்தது, அவருக்கு படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். அவர் உடனே, கொஞ்சம் கூட தாமதிக்காமல், "நான் டூரிஸ்ட் ஃபேமிலியை தியேட்டரில் மூன்று முறை பார்த்தேன்" என்று கூறினார். மேலும் அவரது படம் குறித்து பேசும்போது அவரது கை எந்த அளவுக்கு புல்லரிக்கிறது என்று கைகளை நீட்டிக் காட்டினார். இந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலே எனக்கு புல்லரிக்கிறது, அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்றார்.

டூரிஸ்ட் ஃபேமிலி: தொடர்ந்து பேசிய அவர் சசிகுமார் சாரின் கதாபாத்திரத்துடன் எவ்வாறு ஆழமாக இணைந்திருக்கிறார் என்பதைப் பற்றிப் பேசத் தொடங்கினார், குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாக போராடிய, மறைந்து போன தனது தந்தையுடன் சசிகுமார் சார் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு பேசினார். படம் குறித்து பல நினைவுகளை பேசிக்கொண்டு இருந்த அவர் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சம் உடைந்து போனார்.

இன்ஸ்டா போஸ்ட்: நான் படத்தின் இயக்குநர் என்று நான் அவரிடம் சொன்னபோது, அவர் மகிழ்ச்சியில் மூழ்கி, படத்தின் மீதான தனது அன்பை முழு மனதுடன் வெளிப்படுத்தினார். ஆஹா.. என்ன ஒரு தருணம். உங்கள் சிறிய பங்களிப்பால் ஒருவர் சிரிக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக அதனுடன் ஒன்றிப் போகிறார் என்பதை நீங்கள் உணரும்போது - அந்த வகையான மகிழ்ச்சி உண்மையிலேயே அளவிட முடியாதது" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X