மேடையில் புரோபோஸ் செய்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்.. பதிலுக்கு கண் கலங்கிய தோழி..எமோஷனலா போச்சுப்பா!
சென்னை: வரும் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படங்களில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு படம் என்றால் அது, சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம்தான். அபிஷன் ஜிவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தின் புரோமோசன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில், இயக்குநர் அபிஷன் ஜிவிந்த் தனது நீண்ட நாள் தோழியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் டீசர் வெளியான போதே அது பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக சசிகுமார் மற்றும் சிமரன் காம்பினேஷன் சிறப்பாக உள்ளது என்ற பாசிடிவ்வான அப்ரோச் படத்தின் மீது திரைத்துறையில் இருந்தது. மேலும் படம் கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர் கேட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம், அதிலிருந்து மீள என்னவெல்லாம் செய்கிறது என்பதை அடிப்படையாக வைத்து, குடும்ப ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள தரமான படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே, குட் நைட் , லவ்வர் போன்ற தரமான படங்களை கொடுத்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இந்த படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதுவும் கருடன் போன்ற படத்திற்கு பின்னர் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியாகவுள்ளதாலும், சிம்ரன் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காதல்: இப்படியான நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படக்குழு தரப்பில் அண்மையில் நடைபெற்ற புரோமோசன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது நீண்ட நாள் தோழியிடம் தனது காதலைச் சொன்னார். அப்போது அவரது தோழி கண் கலங்கி மிகவும் எமோஷனலாகிவிட்டார்.

அபிஷன் ஜீவிந்த்: புரோமோசன் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது, அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டு இருந்த இயக்குநர் அபிஷன் ஜீவந்த் தனது தோழிக்கு நன்றி கூறினார். அப்போது அவர் பேசும்போது, ".அகிலா இளங்கோவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அகிலா உன்னை எனக்கு 6வது படிக்கும் போது இருந்தே தெரியும். 10ஆவதில் இருந்து நாம் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக உள்ளோம்.

எமோஷனல்: இந்த இடத்தில் நின்று கொண்டு உன்னிடத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயானு தான் கேட்கனும். I Love You So Much.. நான் எப்போது எல்லாம் மிகவும் மனமுடைந்து காணப்பட்டேனோ அப்போது எல்லாம் எனக்கு ஊக்கம் கொடுத்தவர் அகிலா. நான் இன்றைக்கு சிறந்த மனிதனாக இருக்க எனது அம்மா எப்படி காரணமோ அதேபோல் அகிலாவும் ஒரு காரணம். நன்றிகள் அகிலா" என அவர் தனது காதலை தெரிவித்தார். அபிஷன் ஜீவிந்த் காதலைச் சொன்னதும், அவரது தோழி அகிலா இளங்கோவன் எமோஷனலாகி அழுதுவிட்டார். இது தொடர்பான காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











