Retro vs Tourist Family: ரெட்ரோ உடன் மோதல் ஏன்?.. டூரிஸ்ட் ஃபேமிலி தயாரிப்பாளரே ஓபனா சொல்லிட்டாரே!

சென்னை: இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் சூர்யாவின் ரெட்ரோ மற்றும் நடிகர் நானியின் ஹிட்: தி தேர்ட் கேஸ் உள்ளிட்ட படங்களும் மே 1ம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெளியீடாக வெளியாக காத்திருக்கின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சூர்யாவின் ரெட்ரோவுக்கும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கும் தான் பெரிய போட்டி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரெட்ரோ படத்துடன் ஏன் மோதுறீங்க என்கிற கேள்விக்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

Tourist Family Producer explains why they clash with Suriya s Retro on May 1

அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் போல சூர்யாவின் ரெட்ரோ படமும் சோலோ ரிலீஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகுமார் படம் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

டூரிஸ்ட் ஃபேமிலிக்கு குவியும் பாராட்டுகள்: சிறு பட்ஜெட்டில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் முன்னதாக நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மே 1ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக போகிறது. சமீபத்தில் செலிபிரிட்டி ஷோ போட்ட நிலையில், படத்தை பார்த்த பலரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடி வருகின்றனர். நடிகர் சமுத்திரகனி இந்த ஆண்டின் சிறந்த படமாக இது இருக்கும் என பாராட்டியுள்ளார். மேலும், பல பிரபலங்களும் திரையரங்க உரிமையாளர்களும் படத்தை பாராட்டியுள்ளனர்.

ரெட்ரோவுக்கு சிக்கல்?: பான் இந்தியா அளவில் ஏற்கனவே சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு போட்டியாக நானியின் ஹிட்: தி தேர்ட் கேஸ் படம் மே 1ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஃபீல் குட் மூவியாக சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் அந்த படத்துக்கு ஆதரவு கொடுத்துவிட்டால் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Tourist Family Producer explains why they clash with Suriya s Retro on May 1

ரெட்ரோவுடன் மோதுவது ஏன்?: சமீபத்தில் நடைபெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்துடன் டூரிஸ்ட் ஃபேமிலி படம் மோதுவது ஏன் என்கிற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், சூர்யா சார் படத்துடன் மோத வேண்டும் என்பதெல்லாம் எங்களுடைய இன்டென்ஷனே கிடையாதுங்க. இப்போதெல்லாம் ஓடிடி நிறுவனங்கள் தான் படங்களின் ரிலீஸ் தேதியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. அதன் காரணமாகத்தான் இந்த ரிலீஸ் கிளாஷ் ஏற்பட்டுள்ளதே தவிர, அது பெரிய படம் அந்த படத்துக்கும் எங்களுக்கும் எந்த வகையிலும் போட்டியில்லை எனக் கூறியுள்ளார்.

மக்கள் சப்போர்ட் யாருக்கு?: ரெட்ரோ கேங்ஸ்டர் படமாக வெளியாக உள்ளது. அந்த படத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளை தாண்டி ரொமான்ஸ் மற்றும் எமோஷனலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்துக்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் காரணமாக மக்கள் யாருக்கு சப்போர்ட் கொடுக்கப் போகின்றனர் என்பது வரும் மே 1ம் தேதி தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X