டொவினோ தாமஸ், கயாடு லோஹரின் படம் ரெடி.. பெரிய பட்ஜெட்டில் உருவான பள்ளிச்சட்டம்பி!

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், நடிகர் டொவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் "பள்ளிச்சட்டம்பி" திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இதன் மோஷன் போஸ்டர், சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பைப் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டொவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கதாபாத்திரத்தைக் காட்டும் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்பு போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் அண்மையில் வெளியானது. "பள்ளிச்சட்டம்பி" திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இப்படத்தில் டொவினோ தாமஸை ரசிகர்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார். வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சாணுக்கியா சைதன்யா சரண் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

கயாடு லோஹர் நாயகியாக நடிக்க, விஜயராகவன், சுதீர் கரமணா, பாபுராஜ், வினோத் கெடமங்கலம், பிரசாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இதில் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை, 1950-60கள் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு எஸ். சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவையும், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பையும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பையும், திலீப் நாத் கலை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

இணை தயாரிப்பாளர்களாக மேகாஸ்யாம், தண்சீர் பணியாற்றுகின்றனர். உடை வடிவமைப்பை மஞ்சுஷா ராதாகிருஷ்ணன், ஒப்பனையை ரஷீத் அகமது கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக அலெக்ஸ் இ. குரியன், நிதிக் கட்டுப்பாட்டாளராக அனில் அம்பல்லூர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ராஜேஷ் மேனன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

முதன்மை இணை இயக்குநர்களாக ரெனிட் ராஜ், கிரண் ரஃபேல்; சவுண்ட் டிசைன் சிங்க் சினிமா; கலை இயக்கம் ராஜேஷ் மேனன்; காஸ்டிங் பினோய் நம்பால; ஸ்டில்ஸ் ரிஷால் உன்னிகிருஷ்ணன்; போஸ்டர் வடிவமைப்பு யெல்லோடூத்ஸ்; டிஜிட்டல் மார்க்கெட்டிங் அகில் விஷ்ணு வி.எஸ்; மக்கள் தொடர்பு யுவராஜ் என ஒரு பெரிய குழு இப்படத்திற்காகப் பணியாற்றியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X